herzindagi
image

காஷ்மீரி பாப்ரிபியோல் குடித்து கோடை வெயில் சூட்டை தணிச்சுக்கோங்க

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உமர் செய்த காஷ்மீரி பாப்ரிபியோல் பானத்தை பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். கோடை வெயிலை சமாளிக்க பாப்ரிபியோல் பானத்தை குடிக்கலாம். வாருங்கள் இதை எப்படி செய்வது என பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-25, 11:03 IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல புதிய ரெசிபிக்களை தெரிந்து கொண்டு அதை சமைத்து ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சென்ற வார எபிசோடில் உமர் காஷ்மீரி பாப்ரிபியோல் பானம் செய்திருந்தார். காஷ்மீரி ஹரிசா, காஷ்மீரி பிரெட் செய்த முந்தைய எபிசோடில் இதை பார்த்திருப்பீர்கள். இது காஷ்மீரில் கந்த் சர்பத் என்றழைக்கப்படுகிறது. பால், சப்ஜா விதைகளை முதன்மை பொருட்களாக கொண்டு இதை தயாரிக்கின்றனர். தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், ஐஸ் கிரீம், சர்பத், ஜிகர்தண்டா ஆகியவற்றை குடிக்கிறோம். இந்த பாப்ரிபியோல் எனும் கந்த் சர்பத் கோடை பானம் என்றே பெயர் பெற்றுள்ளது. இதை நாமும் வீட்டில் தயாரித்து குடிக்கலாம். வாருங்கள் காஷ்மீரி பாப்ரிபியோல் எப்படி செய்வது என பார்ப்போம்.

kashmiri babribyol drink recipe

காஷ்மீரி பாப்ரிபியோல் செய்ய தேவையானவை

  • சப்ஜா விதைகள்
  • பால் 
  • பாதாம்
  • குங்குமப்பூ 
  • ஏலக்காய் தூள்
  • சர்க்கரை 
  • கருப்பு உலர் திராட்சை
  • கொப்பரை தேங்காய் 

குறிப்பு : முதலில் இரண்டு டீஸ்பூன் சப்ஜா விதைகளை 100 மில்லி தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். சப்ஜா விதைகள் அசிடிட்டி, நெஞ்சு எரிச்சல் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு நல்லது. 

பாப்ரிபியோல் பானம் செய்முறை

  • அரை லிட்டர் பாலை நன்கு கொதிக்கவிடவும். பால் கொதித்த பிறகு அதில் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலக்கவும். 
  • இதில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், பத்து கருப்பு உலர் திராட்சை, பொடிதாக நறுக்கிய பாதாம் இரண்டு ஸ்பூ போடவும். முன்னதாக நான்கு டீஸ்பூன் பால் தனியாக எடுத்து ஒரு டீஸ்பூன் குங்குமப் பூ உடன் கலக்கவும்.
  • பாலின் சூடு குறைந்தவுடன் அதை இரண்டு மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். 
  • தொடக்கத்தில் ஊறவைக்கப்பட்ட சப்ஜா விதைகள் மொத்தமும் தண்ணீரை உறிஞ்சியிருக்கும். 
  • பெரிய பாத்திரம் எடுத்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்த பால், ஊறவைத்த சப்ஜா விதைகளை போட்டு கலக்கவும். 
  • இதனுடன் கால் மூடி துருவிய கொப்பரை தேங்காயை சேர்க்கலாம். 
  • இதை டம்ளரில் பரிமாறும் போது குங்கமப்பூ பாலில் இருந்து அரை டீஸ்பூன் எடுத்து மேலே ஊற்றி கொடுக்கவும். 
  • தமிழகத்தில் சர்பத், ஜிகர்தண்டா எப்படியோ... அது போல காஷ்மீரில் இந்த பாப்ரிபியோல் பானத்தை மக்கள் விரும்பி குடிக்கின்றனர். 

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com