
உடல் ஆரோக்கியத்தை போலவே மன ஆரோக்கியமும் மிக முக்கியமானது. வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக மனநலம் பாதிக்கப்படும் போது, அது நமது அன்றாட செயல்பாடுகளிலும், உணர்ச்சிகளிலும் வெளிப்படும்.
உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை குறிக்கும் முக்கியமான அறிகுறிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், கவனம் எடுத்துக் கொண்டு, நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம் ஆகும்.
முன்பு நீங்கள் எளிதாக செய்ய முடிந்த வேலைகளை, இப்போது கவனம் செலுத்த முடியாமல் சரியாக செய்ய முடியாமல் திணறுவது ஒரு முக்கியமான அறிகுறி. எதிலும் நாட்டமில்லாமல், உங்கள் இலக்கில் இருந்து விலகிச் செல்வீர்கள்.
திடீரென்று நீங்கள் அடிக்கடி அழ ஆரம்பிக்கலாம் அல்லது அதற்கு நேர்மாறாக, எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் உணர்ச்சியற்று காணப்படலாம். இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை இல்லாமல் தீவிரமான மனநிலையில் இருப்பது மனநல பாதிப்பின் அறிகுறியாகும்.

மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்
நீங்கள் தூங்கும் நேரத்தில் பெரிய மாற்றங்களை உணர்ந்தால், அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக தூங்குவது அல்லது மிகக் குறைவாக தூங்குவது இரண்டும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சரியாக தோன்றாமல் போகலாம். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கோபமடைந்து, தொடர்ந்து எரிச்சலுடன் காணப்படுவீர்கள்.
முன்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே செல்வது, உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வது என மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆனால், இப்போது எதிலும் ஆர்வமில்லாமல், வீட்டிலேயே இருப்பது போன்ற நிலைக்கு மாறுவது மனச்சோர்வின் அறிகுறியாகும்.

உங்கள் தோற்றம், தனிப்பட்ட சுகாதார விஷயங்களில் அக்கறை காட்டாமல் விடுவது முக்கிய அறிகுறியாகும். உங்களை குறித்து நீங்கள் அக்கறைப்படுவதை முற்றிலும் நிறுத்திவிடுவது போன்று தோன்றலாம்.
இவை தவிர, முன்பு இல்லாத ஒரு திடீர் மாற்றமாக, உங்களை பற்றிய எல்லாவற்றையும் நீங்கள் வெறுக்க தொடங்கலாம். இது சுய மதிப்பின்மை மற்றும் மனச்சோர்வின் தீவிரமான அறிகுறியாகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் தொடர்ந்து உணர்ந்தால், தயங்காமல் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுகி பேசுவது மிக முக்கியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com