அட்டகாசமான மங்களூரு கோலி பஜ்ஜி ரெசிபி; 30 நிமிடங்களில் செய்யலாம்

மங்களூரு கோலி பஜ்ஜி பல வகையான பஜ்ஜி வகைகளின் ஒன்றாகும். இதன் செய்முறை மிகவும் எளிதானது. காலை மற்றும் மாலை நேரங்களில் டீ அல்லது காஃபியோடு சுட சுட சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
image

கோலி பஜே அல்லது கோலி பஜ்ஜி என்பது மங்களூருவில் மிகவும் பிரபலமான ஸ்நாக் ஆகும். துளு நாட்டில் இது கோலி பஜே எனவும் கன்னடத்தில் மங்களூரு கோலி பஜ்ஜி எனவும் தெலுங்கு பேசும் மாநிலங்களில் மங்களூரு போண்டா என அழைக்கப்படுகிறது. கோலி குண்டு சைஸில் இருக்கும் இந்த பஜ்ஜியை சட்னியோடு தொட்டு சாப்பிடுவதற்கு மிக ருசியாகத் தெரியும். மைதா, தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அரை மணி நேரத்திற்குள் கோலி பஜ்ஜி தயாரித்துவிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

mangalore goli bajji recipe

மங்களூரு கோலி பஜ்ஜி செய்ய தேவையானவை

  • மைதா மாவு
  • தயிர்
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • பச்சை மிளகாய்
  • மிளகு
  • சீரகம்
  • அப்ப சோடா
  • இஞ்சி
  • உப்பு
  • கடலெண்ணெய்

மேலும் படிங்கபிரமாதமான ஆந்திரா சிக்கன் புலாவ் செய்முறை; மீண்டும் மீண்டும் ருசிக்க தோணும்

மங்களூரு கோலி பஜ்ஜி செய்முறை

  • முதலில் கால் கிலோ மைதா மாவு எடுத்துக்கொள்ளுங்கள். இதோடு 200 மில்லி லிட்டர் தயிர் சேர்க்கவும். கோலி பஜ்ஜி செய்முறைக்கு தண்ணீர் பயன்படுத்தாதீர்கள்.
  • அடுத்ததாக கொஞ்சம் பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் 30 கிராம் இஞ்சியை பொடிதாக நறுக்கி போடவும்.
  • இதோடு இரண்டு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி, 10 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் ஆப்ப சோடா சேருங்கள்.
  • ஸ்பூன் வைத்து முட்டை கலக்குவது போல சுமார் பத்து நிமிடங்களுக்கு கைகளால் மாவை பீட் செய்யவும்.
  • இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். 15 நிமிடங்களுக்கு மாவை எதுவும் செய்ய வேண்டாம் அப்படியே விட்டு விடுங்கள்.
  • கடாயில் அரை லிட்டர் கடலெண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து கையில் தண்ணீர் தொட்டு மாவை கோலி குண்டு சைஸில் உருண்டை பிடித்து எண்ணெய்-ல் போடுங்கள்.
  • மாவை உள்ளே போடும் போது முட்டை முட்டையாக வரும். மிதமான தீயில் வெளியே கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மைதா மாவு நன்கு வேக வேண்டும்.
  • நீங்கள் அதிகமான மொறுமொறுப்பை விரும்பினால் ஐந்து ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்.
  • இந்த மங்களூரு கோலி பஜ்ஜியை சுட சுட 10 நிமிடங்களுக்கு சாப்பிட்டு விடுவது நல்லது.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP