herzindagi
image

தூங்க விடாமல் வறட்டு இருமல் பாடாய்ப்படுத்துகிறதா? சரி செய்ய கொய்யா இலைகள் போதும்!

சுற்றுச்சூழல் மாசு, தூசி, ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் வறட்டு இருமல் பாதிப்பை நாம் சந்திக்க நேரிடும். என்ன தான் இருமல் மாத்திரைகள் சாப்பிட்டாலும் பல நேரங்களில் தூங்கவே விடாத அளவிற்கு வறட்டு இருமல் பாடாய்ப்படுத்தும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றால், ஒருமுறையாவது கொய்யா இலைகளை முயற்சி செய்துப்பாருங்கள்.
Editorial
Updated:- 2025-11-30, 23:17 IST


சளி, இருமல் வந்தால் கூட பாதிப்பை சரி செய்துவிடலாம். ஆனால் வறட்டு இருமல் வந்தால் 5 நிமிடத்திற்குக் கூட தூங்க விடாமல் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். நொச்சி இலைகளை வைத்து ஆவி பிடிப்பது, தலைக்குப் பயன்படுத்தப்படும் நிவாரணிகளை மார்பில் தடவிக் கொள்வது, சூடான பானங்களை அருந்துவது, மிளகு மற்றும் பொரிகடலை சேர்த்து மென்று சாப்பிடுவது போன்ற முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவோம். ஆனால் குழந்தைகளால் இதை செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த பாதிப்பைத் தவிரக்க வேண்டும் என்றால் கொய்யா இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். எப்படி கொய்யா இலைகள் வறட்டு இருமலைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

  • கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் டி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளதால் இருமல் பாதிப்பைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • கொய்யா மரத்தில் இலைகளில் மைக்கோலிக் குணங்கள் அதிகளவில் உள்ளதால், இது நுரையிரல் பாதையில் உள்ள சளியை அகற்றுவதோடு இருமல் பாதிப்பைக் குறைக்க உதவும்.
  • கொய்யா இலைகளை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது கொய்யா இலைகளை தேநீராக செய்து பருகலாம்.

தவிர்க்க வேண்டியவர்கள்?

கொய்யா இலைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தாலும் அனைவருக்கும் ஏற்றதல்ல. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

 

Image source - Freep

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com