கடவுளின் தேசமான கேரளாவில் பாரம்பரிய இனிப்புகளுக்கு பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு பண்டிகைக்கும் வித்தியாசமான பலகாரங்களை செய்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழ்வார்கள். இந்த பதிவில் நாம் பார்க்க போகும் இனிப்பு கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கார்த்திகை தீப திருநாளில் இந்த இனிப்பை செய்வார்கள். நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கேரளாவின் பாரம்பரிய தெரளி அப்பம்... வாருங்கள் மிகவும் சுவையான தெரளி அப்பத்தின் செய்முறையை பார்க்கலாம்...
தெரளி அப்பம் செய்யத் தேவையானவை
- அரிசி
- தண்ணீர்
- வெல்லம்
- தேங்காய் துருவல்
- வாழைப்பழம்
- தெரளி இலை
- பனை ஓலை
- ஏலக்காய் தூள்
தெரளி அப்பம் செய்முறை
- இரண்டு டம்ளர் அரிசி எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவிடுங்கள்.
- அதன் பிறகு அரிசியை மீண்டும் இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவி துணியில் அரிசியை போட்டு உலர விடுங்கள்.
- இப்போது அரிசியை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.
- அடுத்ததாக பேனில் எண்ணெய் ஊற்றாமல் அரிசி மாவை போட்டு பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். அரிசி மாவின் நிறம் மாறக்கூடாது.
- இதன் பிறகு அரிசி மாவை தட்டில் போடுங்கள். சூடு குறையட்டும். இதனிடையே இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
- பாத்திரத்தில் அரிசி மாவு, அரை மூடி தேங்காய் துருவல், கால் கிலோ வெல்லத்தை துருவி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
- தெரளி அப்பத்தின் சுவையை கூட்டுவதில் வாழைப்பழமும் பங்கு வகிக்கிறது. மூன்று வாழைப்பழம் சேருங்கள்.
- அனைத்தையும் நன்றாக கலந்து சப்பாத்தி மாவு போல உருட்டவும். இதை செய்யும் போது உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
- இந்த ஸ்டஃப்பிங்கை தெரளி இலையில் வைத்து நான்காக மடிக்கவும். நாம் பயன்படுத்திய அளவுக்கு 10-12 தெரளி இலையில் ஸ்டஃப்பிங் செய்யலாம். இவற்றை பனை ஓலையின் கீற்றை கொண்டு கோர்த்து கட்டவும்.
- இட்லி குக்கரில் 4-5 தெரளி இலை போட்டு அதன் மீது ஸ்டஃப்பிங் உள்ள இலைகளை வைக்கவும்.
- 10-12 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். சுவையான தெரளி அப்பம் தயார்.
மேலும் படிங்கஆந்திரா ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு!
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation