herzindagi
special mango recipes

பானிபூரி பிரியர்களே.. இதோ உங்களுக்காகவே மாம்பழ பானிபூரி ரெடி!

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பானிபூரியை மாம்பழங்களைக் கொண்டு ட்ரை பண்ணிப்பாருங்கள்.
Editorial
Updated:- 2024-07-16, 21:35 IST

குழந்தைகள் விரும்பிச்சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஒன்று பானிபூரி. உருளைக்கிழங்கு, வெங்காயம், பானி பூரிக்காக ஸ்பெசலாக தயாரிக்கப்படும் நீர் அனைத்தையும் ஒன்றாக பூரிக்குள் வைத்து சாப்பிடுவதே தனி ருசி. ஆனால் என்ன? சமீப காலங்களாகவே நாம் சாப்பிடக்கூடிய பானி பூரி உடல் நலத்திற்கு கேடு என்றும், குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களுக்கு பல்வேறு நோய்த்தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் சோசியல் மீடியாக்களின் வாயிலாக வெளியானது.

ஆனாலும் இதன் மோகம் மக்களுக்கு குறைந்த பாடில்லை. குழந்தைகளும்  வெளியில் சென்றால் தனக்கு பானிபூரி வாங்கிக் கொடுங்கள் என்று அடம்பிடிப்பார்கள். உடலுக்கு கேடு என தெரிந்தும் நிச்சயம் ,பெற்றோர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இதோ அவர்களுக்காக வீட்டில் எப்படி பானி பூரி செய்வது? அதிலும் அனைவருக்கும் விருப்பமான மாம்பழங்களை வைத்து பானி பூரி செய்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

pani puri

மேலும் படிக்க: சுவையான மஞ்சள் பூசணிக்காய் ஹல்வா செய்வது எப்படி?

மாம்பழ பானிபூரி ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • பானி பூரி - தேவையான அளவு
  • மாம்பழம் - 5
  • தயிர்- அரை கப்
  • சர்க்கரை- சுவைக்கு ஏற்ப
  • ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
  • சீரகம்- சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:

பானி பூரியைக் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யுங்கள். இதற்காக தேவையான அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கோதுமை மாவை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர் வழக்கம் போல பூரிக்கு திரட்டுவது போன்று திரட்டிக் கொள்ளவும். பெரிதாக இல்லாமல் சிறிது சிறிதாக உருட்டிக் கொண்டு எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் போதும். மினி பூரி ரெடி. ஒருவேளை எண்ணெய்யில் பொரிக்கவில்லையென்றால் ஏர்ப்ரையர் பயன்படுத்தியும் பொரித்துக் கொள்ளவும்.

 பூரியில் வைப்பதற்காக மாம்பழங்களை ஸ்ட்ஃப்பிங்  செய்ய வேண்டும். இதற்கு முதலில் பழுத்த மாம்பழங்களைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மாம்பழ விழுது, தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். இதை அரை மணி நேரத்திற்கு ப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் புளி கரைசல் மற்றும் வெல்லம் இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்தால் போதும் சுவையான புளி சாஸ் ரெடி. இதோடு சாஸ் போன்றில்லாமல் தண்ணீராக வேண்டும் என்றால் புளி கரைசலில் புதினா, சீரகம், மிளகுத் தூள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்தால் போதும். இப்போது பானிபூரிக்குத் தேவையான அனைத்து பொருட்களும் தயாராகிவிட்டது.

மேலும் படிக்க: சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்வது எப்படி?

making pani puri

இதையடுத்து வழக்கம் போல பூரிக்குள் ஸ்டப்பிங் செய்யப்படும் உருளைக்கிழங்கு, பட்டாணியைப் போன்று செய்து வைத்து மாம்பழங்களை பிரிட்ஜில் எடுத்து ஸ்டப்பிங் செய்யவும். பின்னர் புளி சாஸையும் சேர்த்தால் போதும். சுவையான மாம்பழ பானி பூரி ரெடி. மாம்பழ கலவையை உடனே ப்ரிட்ஜிற்குள் எடுத்து உபயோகிக்ககூடாது. குளிர்ந்த தன்மை மறைந்த பின்னதாக சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும். வழக்கமான பானி பூரிக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த மாம்பழ பானி பூரியை ட்ரை பண்ணுங்கள்.

Image source - Google 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com