herzindagi
  ()

Kuthiraivali rice payasam: சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்வது எப்படி?

சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்முறை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-07-11, 11:28 IST

பாயாசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? நம் தமிழக கலாச்சாரத்தில் உணவுமுறையில் ஒரு இனிப்பு வைத்து சாப்பிடுவது வழக்கம். கல்யாண வீடுகளில் மட்டும் இல்லாமல் ஏதேனும் விஷேஷ நாட்களில் கூட நம் வீடுகளில் மத்திய உணவிற்கு பிறகு ஒரு இனிப்பு வகையை சமைத்து சாப்பிடுவோம். அந்த வகையில் நாம் சமைக்கும் இனிப்பு வகை சுவையானதாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த வரிசையில் வீட்டில் இருந்தபடி நாம் சுவையான ஆரோக்கியமான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • குதிரைவாலி அரிசி - 100 கிராம் 
  • மில்க்மெய்ட் - 1/2 கப் 
  • பால் - 2 லிட்டர் 
  • சர்க்கரை தேவையானஅளவு 

தாளித்து எடுக்க தேவையான பொருட்கள்: 

  • நெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் 
  • பாதாம் - 2 டேபிள்ஸ்பூன் 

சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் செய்வது எப்படி?

முதலில் ஒரு அடிகனமான சிறிய பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை தண்ணீரில் கழுவி எடுத்து சேர்க்கவும். இப்போது அதே பாத்திரத்தில் காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் இந்த குதிரைவாலி அரிசி வேகும் வரை நன்கு கிளறிக் கொண்டே வேக வைக்க வேண்டும். இதனை அடுத்து அரிசி வெந்த பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்த சர்க்கரை பாலுடன் கரைந்த பிறகு மில்க் மெய்டு சேர்த்து கலக்க வேண்டும். 

Badaam Kheer Thumbnail

இப்போது தாளிக்க ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து அந்த நெய்  உருகியதும் நாம் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். இப்போது நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் பருப்பை பாயசத்தில் சேர்த்துக் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் தயார். இந்த குதிரைவாலி அரிசி பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com