herzindagi
palli podi recipe

ஆந்திரா பள்ளி பொடி செய்வது எப்படி தெரியுமா ? சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்

ஆந்திரா ஸ்பெஷல் பள்ளி காரம் பொடி சாதத்துடன் பிரட்டி சாப்பிடுவதற்கும், போண்டா மீது தூவி சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும். பள்ளி காரம் பொடியை நம் காரத்திற்கு ஏற்ப இரண்டு விதமாக தயாரிக்கலாம்.
Editorial
Updated:- 2025-07-25, 11:13 IST

ஆந்திரா மீல்ஸ் பரிமாறும் போது முதலில் பருப்பு பொடி நெய் தருவார்கள். அந்த பருப்பு பொடியை ருசிக்கவே நாம் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவோம். ஆந்திரா சமையலில் மற்றொரு ஸ்பெஷலான பொடியாக பள்ளி காரம் பொடி இருக்கிறது. இதை நடிகை ஸ்ரீலீலா வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். பள்ளி காரம் பொடி அல்லது பள்ளி பொடி ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதி ஸ்பெஷல் தயாரிப்பாகும். பள்ளி பொடி வேர்க்கடலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பள்ளி காரம் பொடி குறிப்பாக பேச்சுலர்களுக்கு பயன்படும். சாதம் இருந்தால் இரண்டு ஸ்பூன் பள்ளி பொடி கலந்து சாப்பிட்டுவிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். இறுக்கமான பாத்திரத்தில் போட்டு இரண்டு மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

palli podi recipe

பள்ளி பொடி செய்ய தேவையானவை 

  • வேர்க்கடலை 
  • வர மிளகாய்
  • உளுத்தம் பருப்பு
  • கடலை பருப்பு
  • சீரகம்
  • முழு தனியா
  • கறிவேப்பிலை
  • பல் பூண்டு 
  • புளி
  • உப்பு

பள்ளி பொடி செய்முறை 

  • கடாயில் 200 கிராம் வேர்க்கடலை போட்டு மிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் நிறம் மாறும் வரை வறுக்கவும். 
  • வேர்க்கடலை வறுத்தவுடன் அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 20 வரமிளகாய் போட்டு வறுக்கவும். 
  • வரமிளகாயை வெளியே எடுத்த பிறகு தலா நான்கு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுக்கவும். 
  • அடுத்ததாக இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் முழு தனியா, கொஞ்சம் கறிவேப்பிலை, பாதி எலுமிச்சை சைஸ் புளி போட்டு வறுத்திடுங்கள். 
  • இப்பொருட்களின் சூடு குறைந்தவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு, பத்து பல் பூண்டு போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும். 
  • பள்ளி பொடி தயார். இதன் காரம் கம்மியாக இருக்கும். நாம் மற்றொரு செய்முறையை பார்க்கலாம்.

பள்ளி பொடி செய்முறை 2

  • கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அரை கிலோ வேர்க்கடலை போட்டு வறுக்கவும். சூடு குறைந்த பிறகு வேர்க்கடலை தோல் நீக்கி விடவும்.
  • அதே கடாயில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். அதில் 20 வரமிளகாய் போடுங்கள். 
  • அதன் பிறகு சீரகம் இரண்டு ஸ்பூன் போட்டு வறுத்து எடுக்கவும். 20 பல் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து நன்றாக அரைக்கவும்.
  • சூப்பரான பள்ளி காரம் பொடி ரெடி. 

மேலும் படிங்க  நாவல் பழ சட்னி இருந்தால் கணக்கில்லாமல் இட்லி, தோசை சாப்பிடுவீங்க

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com