herzindagi
image

குழந்தை பிறந்து 6 மாத காலம் முடிவடைந்துவிட்டதா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுத்திடுங்க

குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலங்கள் நிறைவடைந்தவுடன் கட்டாயம் தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகளைக் கொடுப்பது மிகவும் அவசியமானது.
Editorial
Updated:- 2025-08-11, 17:42 IST

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிகவும் சவாலான ஒன்று. பிறந்த நாள் முதல் ஒரு மாத காலத்திற்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் காரணமாகத் தான் தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

மேலும் படிக்க: கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்

6 மாத குழந்தைகளுக்கான உணவு பட்டியல்:

குழந்தைகள் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது முழுமையான திரவ உணவாகவோ அல்லது திட உணவுகளாகவோ கொடுக்கக் கூடாது. வாயில் போட்டவுடன் கரைகிற மாதிரியான உணவுகளைத் தயார் செய்துக் கொடுக்கவும்.

 food chart for babies

கஞ்சிப்பக்குவத்தில் உணவுகள்:

தாய்ப்பாலை மட்டும் குடித்துப்பழகிய குழந்தைகளுக்குக் கஞ்சி பக்குவத்தில் உணவுகளைத் தயார் செய்துக் கொடுக்கும் போது எளிதாக வாயில் ஊட்டியவுடன் கரையக்கூடும். இட்லி, ஊத்தப்பம் போன்று தோசைகளை செய்து ஊட்டும் போது தண்ணீரில் கரைத்து ஊட்டுவது நல்லது.

நன்கு வேக வைத்த சாதத்துடன் கொஞ்சமான பாசிப்பருப்பைக் கலந்து ஊட்டலாம். ஒரு 7 மாதத்தில் சுத்தமான நெய் கொஞ்சம் சேர்த்து உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பழங்கள்:

குழந்தைகளுக்கு இணை உணவுகளாக பழங்களைக் கொடுக்க ஆரம்பிக்கும் போது ஆப்பிள், வாழைப்பழத்தை லேசாக வேக வைத்தோ? அல்லது அரைத்து கூழாகக் கொடுக்க வேண்டும். இயற்கையாக இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.

காய்கறிகள்/ கிழங்குகள்:

கேரட், உருளைக்கிழங்கு, நன்கு அரைத்த பீட்ரூட் போன்றவற்றை சாதத்துடன் மசித்துக் கொடுக்கலாம். அதே போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தண்ணீருடன் மசித்துக் கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: Parenting Tips: உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் இல்லையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காக 6 மாத காலத்திற்குப் பிறகு இணை உணவுகளைக் கொடுப்பது நல்லது என்றாலும் கட்டாயப்படுத்தி உணவுகளை அளிக்கக்கூடாது. அதுவே குழந்தைகளுக்கு செரிமானம் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com