காலை உணவிற்கு ருசியான ஜவ்வரிசி உப்புமா ட்ரை பண்ணலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே

காலை உணவிற்கு என்ன செய்யலாம்? என்ற குழப்பம் இருந்தால் எவ்வித யோசனையும் இன்றி ஜவ்வரிசியில் உப்புமா ட்ரை பண்ணிப்பாருங்கள்
image

காலை உணவு என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்று. நாள் முழுவதும் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டும் என்றால் உடலுக்குத் தேவையான ஆற்றல் காலை உணவின் மூலம் தான் பெற முடியும். பொதுவாக பலரது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை போன்ற ரெசிபிகள் தான் அதிகளவில் இடம் பெற்றிருக்கும். பல நேரங்களில் இதையே சாப்பிடுவது மிகவும் சளிப்பாகிவிடும்.இதற்கு மாற்றாக வழக்கமாக செய்யக்கூடிய உப்புமாவிற்குப் பதிலாக ஜவ்வரிசியைக் கொண்டு உப்புமா செய்யலாம் தெரியுமா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

காலை உணவிற்கு ஜவ்வரிசி உப்புமா:

தேவையான பொருட்கள்

  • ஜவ்வரிசி -அரை கப்
  • தயிர் - கால் கப்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் வத்தல் - 1
  • வேக வைத்த பாசிப்பயறு

ஜவ்வரிசி உப்புமா செய்முறை:

  • காலை உணவிற்கு ஜவ்வரிசி உப்புமா செய்வதற்கு முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவிக்கொண்டு அதனுடன் சிறிதளவு தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சுவையான முந்திரி கொத்து செய்வது எப்படி? ரெசிபி இதோ

  • பின்னர் ஒரு கடாயில் பாசிப்பருப்பை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஊற வைத்த ஜவ்வரிசியை நன்கு வடிகட்டி தண்ணீர் இல்லாமல் தாளிப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஜவ்வரிசியை ஊற வைத்திருப்பதால் சீக்கீரம் வெந்துவிடும். ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் தண்ணீர் சேர்த்து கொஞ்ச நேரத்திற்கு வேக வைக்க வேண்டும்.
  • இதையடுத்து வேக வைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பையும் உடன் சேர்ந்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து கொஞ்ச நேரம் வேக வைக்க வேண்டும்.
  • இறுதியாக லேசாக கொத்தமல்லி இலைகளைத் தூவினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி உப்புமா ரெடி.
  • பாசிப்பருப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஒருவேளை பாசிப்பருப்பு சேர்க்கப் பிடிக்கவில்லையென்றால் கடலைப் பருப்பைத் தாளித்து செய்யலாம். வழக்கமான ரவா உப்புமாவிற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP