கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சுவையான முந்திரி கொத்து செய்வது எப்படி? ரெசிபி இதோ

இந்த முந்திரி கொத்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பெரும்பாலானோர் வீட்டில் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத ஸ்னாக்ஸ் வகை என்று கூறலாம். அந்த வரிசையில் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் முந்திரி கொத்து செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். 
image

கன்னியாகுமரி என்று கூறினால் அங்கு கடற்கரை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம் போன்றவை பிரபலம். அதே போல இந்த ஊரில் முந்திரி கொத்து என்ற பாரம்பரிய இனிப்பு வகை மிகவும் பிரபலம். இந்த முந்திரி கொத்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பெரும்பாலானோர் வீட்டில் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத ஸ்னாக்ஸ் வகை என்று கூறலாம். அந்த வரிசையில் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் முந்திரி கொத்து செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்:

  • 1 கப் பச்சை பாசி பயறு
  • 1/3 கப் வெல்லம்
  • அரை கப் அரசி மாவு
  • அரை கப் துருவிய தேங்காய்
  • அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

சுவையான முந்திரி கொத்து ரெசிபி:


தேவையான அளவு வெல்லத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து முதலில் வெல்ல பாகு தயாரித்து கொள்ளவும். இதற்கு பிறகு ஒரு சூடான கடாயில் பச்சை பாசி பயறை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இதனை அடுத்து தேங்காயை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அதில் நாம் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மநதர-கதத-munthiri-kothu-recipe-in-tamil-சயமற-மககய-பகபபடம

இதற்கு பிறகு மறுபுறம் நாம் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் நாம் கலந்து வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். இது அனைத்தும் வெல்ல பாகில் சேறும் வரை நன்கு கலக்கவும். இவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே அதனை சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?

இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். இதனை அடுத்து நாம் தயாரித்த உருண்டைகளை இந்த மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டும் என்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கலாம். அவ்வளவு தான் சுவையான முந்திரி கொத்து ரெடி.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP