herzindagi
image

குழந்தைகளுக்கு எப்படி மருந்துகள் கொடுக்க வேண்டும்? பாதிப்புகளைத் தவிர்க்க செய்ய வேண்டியது!

பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுள்ள குழந்தைகள் வரை அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் பல உடல் நல பிரச்சனைகள் மட்டுமில்லாது உயிருக்கே பல நேரங்களில் ஆபத்தாக அமையும்.
Editorial
Updated:- 2025-08-20, 18:16 IST

குழந்தைகளுக்கு எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு அம்மாக்களும் முயற்சி செய்வார்கள். ஆனாலும் பல நேரங்களில் எதிர்பாரதவிதமாக காய்ச்சல், சளி, இருமல் , வயிற்றுப்போக்கு, வயிறு உப்பிசம், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். வீட்டில் சில இயற்கை வைத்தியங்களை மேற்கொண்டாலும் மருத்துவமனைக்குச் சென்றால் தான் பல நோய்கள் குணமாகும். ஆனால் மருந்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொடுப்பதற்குள் அம்மாக்களைப் பாடாய்படுத்திவிடுவார்கள். இதையெல்லாம் சமாளித்து எப்படி மருந்துக்களைக் கொடுக்க வேண்டும்? என்பது குறித்த பாதுகாப்பு வழிமுறைகள் இங்கே.

குழந்தைகளுக்கு மருந்துக் கொடுக்கும் முறை:

குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பது என்பது பல பெற்றோர்களுக்குப் பெரும் சவாலான விஷயம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்று கோபம் கொள்ளக்கூடாது. அமைதியான முறையில் தான் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சிரப் அல்லது மாத்திரைகள் என எதை குழந்தைகளுக்குக் கொடுத்தாலும் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்

கைக்குழந்தைகளுக்கு வைட்டமின் சிரப் அல்லது காய்ச்சல், சளிக்கான மருந்துகள் கொடுக்கும் போது கட்டாயம் சரியான அளவிற்காக மெசரிங் ஸ்பூன், மெசரிங் கப், மெசரிங் சிரஞ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதோடு எப்போதும் கைக்குழந்தைகளை மடியில் படுக்க வைத்து கை மூட்டுகளில் தலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திக்கான அல்லது பவடரில் தண்ணீர் கலந்துக் கொடுக்கும் மருந்துகள் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், நன்கு குளுக்கிய பின்னதாக கொடுக்க வேண்டும். குறிப்பாக நாக்கின் மேல் பகுதியில் வைத்துவிடக்கூடாது.ஒரு பக்கமாக அதாவது வாயின் உள்ளே வைத்துக் கொடுக்கவும்.

 

1 வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கான மருந்து:

குழந்தைகள் சிரப் கொடுப்பது வழக்கம். பல நேரங்களில் நோய் சரியாக வேண்டும் என்பதற்காக மாத்திரைகளும் தரப்படும். பெரியவர்கள் போன்று அப்படியே முழுங்க செய்யக்கூடாது. மருந்துவர்களிடம் கேட்டு, மாத்திரையைப் பொடியாக்கி தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்துக் கொடுக்கலாம். இல்லையென்றால் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழப்புகள் கூட ஏற்படும். இப்படித் தான் இன்றைக்கு திருத்தணியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் மாத்திரையை விழுங்கி முழுங்க முடியாமல் உயிரிழந்தார் என்பது வேதனைக்குரிய விஷயம். எனவே எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்

கவனிக்க வேண்டியவை:

குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக மருந்துகள் கொடுப்பது மிகவும் முக்கியமான விஷயம். எனவே சில விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். குறிப்பாக காலாவதியான மருந்துகளா? என்பதை சரிபார்க்க வேண்டும். மருந்துகள் கொடுத்த பின்னதாக சரியாக மூடியுள்ளோமோ? என்பதையும் கவனிக்க வேண்டும்.

Image credit - pexels

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com