herzindagi
image

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி செய்முறை

இட்லி, தோசைக்கு வெறும் தக்காளி, பொரிகடலை, புதினா, மல்லி சட்னியாக சாப்பிட்டு மிகவும் சளிப்பாகிவிட்டதா? அதற்கு கொஞ்சம் மாற்றாக ஏதாவது சமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் கொஞ்சம் கொங்கு நாட்டு சமையலில் முக்கியத்துவம் பெற்ற தக்காளி பஜ்ஜி அதாவது தக்காளி கடைசல் ரெசிபியை கொஞ்சம் ட்ரை பண்ண முயற்சி செய்யுங்கள். அதிக காரமும் இல்லாமல், புளிப்பும் இல்லாமல் இருக்கும் இந்த தக்காளி பஜ்ஜி ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
Editorial
Updated:- 2024-11-07, 22:41 IST

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் மிகவும் பேமஸாக இருக்கும். கொங்கு நாட்டு சமையலில் மிகவும் பிரசிதிப்பெற்ற உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது தக்காளி பஜ்ஜி எனப்படும் தக்காளி கடைசல். எப்போதும் செய்வது போன்று தக்காளி தொக்கு போன்று இருந்தாலும், காரமில்லாமலும், புளிப்பு சுவையுடன் இருப்பதால் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு சப்ஜியாக வைத்துக் கொள்ளலாம். இதுவரை நீங்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணவில்லையென்றால் இப்ப ட்ரை பண்ணிப்பாருங்கள்.. சிம்பிளான முறையில் தக்காளி பஜ்ஜி ரெசிபியை செய்யும் முறை உங்களுக்காக.

 

நாவிற்கு சுவையூட்டும் தக்காளி பஜ்ஜி ரெசிபி:

வெறும் 15 நிமிடங்களில் செய்து முடிக்கக்கூடிய தக்காளி பஜ்ஜி அதாவது தக்காளி பஜ்ஜி ரெசிபியை செய்து விட முடியும். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து விபரத்தை அறிந்துக்கொள்ளலாம்.

tomato recipe

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 20 கிராம்
  • தக்காளி - 5
  • எண்ணெய் - தாளிப்பதற்கு ஏற்ப
  • கடுகு - சிறிதளவு
  • மிளகாய் வத்தல் - 5
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

மேலும் படிக்க: கர்நாடகா ஸ்பெஷல் ஷாவிகே பாத்; அற்புதமான பிரேக் பாஸ்ட் ரெசிபி

தக்காளி பஜ்ஜி செய்முறை:

  • கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி செய்வதற்கு முதலில் மிதமான சூட்டில் குக்கரை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மற்றும் 5 மிளகாய் வத்தல் சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: கேரள ஸ்பெஷல் சட்டி பத்திரி ரெசிபி! ஆரோக்கியமான பிரேக் பாஸ்ட்

  • இதையடுத்து சின்ன வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே முழுதாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெந்தயம் பாதியாக வதங்கியவுடன் தக்காளி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியவுடன் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக்கொள்ளவும். சிறிதளவு உப்பு சேர்த்து அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவும்.
  • குக்கரிலிருந்து மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். குக்கரின் சூடு அடங்கியதும் தண்ணீரை தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.tomato recipe
  • பின்னர் இந்த வேக வைத்த தக்காளி கலவையுடன் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றினால் போதும். சுவையான கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி ரெடி.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com