கேரளாவின் வடக்கு மலபார் பகுதிகளுக்கு சென்றால் காலை நேரத்தில் நீங்கள் தவரவிடக் கூடாத ஆரோக்கியமான பிரேக் பாஸ்ட் ஒன்று உள்ளது. மைதா, முட்டை, சிக்கன், வெங்காயம், மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சட்டி பத்திரி புரதச் சத்து நிறைந்தது. மைதா மாவில் தோசை ஊற்றி ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி முட்டை வைத்து சிக்கன் ஸ்டஃப்பிங் செய்து சட்டி பத்திரி தயாரிக்கப்படுகிறது. சாப்பிட்டால் அடிபொலி என கட்டாயம் சொல்வீர்கள். மாலை நேரத்தில் டீ உடன் சாப்பிடும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.
சட்டி பத்திரி செய்ய தேவையானவை
- மைதா மாவு
- முட்டை
- சிக்கன்
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- கரம் மசாலா
- மஞ்சள் தூள்
- சிக்கன் மசாலா
- கடுகு
- கறிவேப்பிலை
- நெய்
- நல்லெண்ணெய்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- பெருஞ்சீரக தூள்
- மல்லி தூள்
- மிளகு தூள்
- பச்சை மிளகாய்
சட்டி பத்திரி செய்முறை
- கடாயில் இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நான்கு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.
- உப்பு சேர்த்தால் வெங்காயம் விரைவில் வதங்கும். இதோடு கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து கொள்ளுங்கள்.
- வெங்காயம் வதங்கியவுடன் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
- அடுத்ததாக மூன்று பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி போடுங்கள்.
- மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கலாம். முதலில் ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் சிக்கன் மசாலா அல்லது முக்கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும்.
- இவற்றோடு அரை டீஸ்பூன் பெருஞ்சீரக தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் மிளகு பொடி, முக்கால் டீஸ்பூன் மல்லி தூள் போட்டு கலந்து விடுங்கள்.
- இரண்டு நிமிடம் கழித்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு வேகவைத்த 400 சிக்கனை உதிரி உதிரியாக வெட்டி சேருங்கள்.
- மிதமான சூட்டில் 4-5 நிமிடங்களில் மசாலா பொருட்கள் சிக்கனில் இறங்கிவிடும். கொஞ்சம் கொத்தமல்லி போட்டு இதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- இப்போது ஒன்றரை கப் மைதா மாவு எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, ஒரு முட்டை போட்டு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் தோசை மாவு போல் அரைத்து எடுக்கவும்.
- பேனில் மிதமான சூட்டில் இந்த மைதா மாவினை ஊற்றி இருபுறமும் நன்கு வேக விட்டு எடுக்கவும். நாம் பயன்படுத்திய அளவுகளில் 8 மைதா தோசை ஊற்றலாம்.
- இதனிடையே 5 முட்டையை உடைத்து அதில் கால் கப் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள் போட்டு விஸ்க் வைத்து நன்கு அடிக்கவும்.
மேலும் படிங்கமனமும் சுவையும் நிறைந்த ஆந்திரா சேப்பங்கிழங்கு குழம்பு செய்முறை
- வேக வைக்கும் பாத்திரத்தில் நெய் தடவி மைதா தோசையினை வைத்து சிக்கன் ஸ்டஃப்பிங் செய்யவும். மீண்டும் ஒரு மைதா தோசையினை வைத்து அடுக்கு போல் உருவாக்குங்கள். ஒரு அடுக்கில் சிக்கனுக்கு பதிலாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
- அடுக்குகளை நிரப்பிய பிறகு பாத்திரத்தை தோசை கல்லின் மீது வைத்து 10-12 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும்.
- உள்ளே நன்கு வெந்த பிறகு சட்டி பத்திரியை பேனில் கவுத்தி சூடுபடுத்தினால் மேல் புறமும் வெந்துவிடும்.
- சுவை மிகுந்த சட்டி பத்திரியை கட்டாயம் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation