
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலையில் ஆரம்பித்து விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு தினங்களுக்கு இந்த மழையானது நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல்,காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படக்கூடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உங்களது வாழ்வியல் முறைகளிலே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. இவற்றில் ஒன்றாக உள்ளது சுக்கு மல்லி. வழக்கமான டீ, காபிக்குப் பதிலாக தினமும் சூடாக சுக்கு மல்லி காபியைப் பருகும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: இந்த 7 மூலிகையை பயன்படுத்தி ஆஸ்துமா எண்ணும் கொடிய நோய்க்கு கட்டுப்படுத்தலாம்
மழைக்காலம் வந்துவிட்டாலே பெரும்பாலான வீடுகளில் சுக்கு மல்லி காபி தான் அதிகமாக இடம் பெறும். அந்தளவிற்கு இதன் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மழைக்காலங்களில் ஆற்றலை அளிக்கும் என்பதால் தென்னிந்திய மூலிகை பானம் என்றழைக்கப்படுகிறது. இதை எப்படி தயார் செய்ய வேண்டும்? என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகள்
சுக்கு மல்லி காபியை அதிகளவு உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்துகிறது, சைனஸ், சளி மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் வலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com