உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வழக்கமான இட்லிக்கு மாற்றாக சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்படும் குதிரை இட்லி சிறந்த தேர்வாக உள்ளது.
இன்றைக்கு பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது உடல் பருமன். மாறி வரும் உணவுப்பழக்க வழக்கங்கள், முறையற்ற தூக்கம், துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்ற பல காரணங்களால் உடல் எடையை அதிகரிப்பதை மக்கள் எதிர்கொள்கின்றனர். எந்தளவிற்கு வழக்கத்தை விட உடல் எடை அதிகமாகிறதோ? அந்தளவிற்கு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த நேரத்தில் அதிகரித்த எடையைக் குறைப்பதற்கு ஆவியில் வேக வைக்கும் இட்லி சிறந்த தேர்வாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். வழக்கமான அரிசிக்குப் பதிலாக சிறுதானிய அரிசியில் ஒன்றாக குதிரை வாலியைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். எப்படி குதிரைவாலி இட்லி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது? என்பது குறித்த விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: உடல் எடையை ஆரோக்கியமான குறைக்க விரும்பினால் முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுங்கள்
குதிரை வாலி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எந்தளவிற்கு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்கிறோமோ? அந்தளவிற்கு உடலில் செரிமான அமைப்பு சீராகிறது. சாப்பிடக்கூடிய உணவுகள் அனைத்தும் சீராக செரிமானம் அடையும் போது, கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்க முடியும்.
குதிரை வாலியில் மிகக்குறைந்த அளவு கலோரிகள் உள்ளதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பாதிப்பையும் தடுக்க முடியும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் குதிரைவாலி அரிசி இட்லி பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க: விஷத்தன்மையைக் கூட முறிக்கும் சக்தி கொண்ட கருப்பு மிளகும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்
இதோடு மட்டுமின்றி குதிரைவாலியில் மாவுச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
குதிரைவாலி இட்லி செய்வதற்கு முதலில் குதிரைவாலி அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். அடுத்ததாக உளுந்து மற்றும் வெந்தயம் போன்றவற்றையும் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அரிசி மற்றும் உளுந்தைத் தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மேலும் படிக்க: ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் ரெசிபி டிப்ஸ் இதோ
மாவு கொஞ்சம் புளி பதத்திற்கு வந்தவுடன் இட்லி தட்டியில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும். உடல் எடையைக் குறைக்கும் குதிரைவாலி இட்லி தயார். அப்புறம் என்ன உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இட்லியை மறக்காமல் செய்து சாப்பிடுங்க.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு https://www.herzindagi.com/tamil வுடன் இணைந்திருங்கள்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com