ஊட்டச்சத்துள்ள கீரை பாஸ்தா செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய கீரை பாஸ்தாவை சிம்பிளாக செய்யும் முறை
image


கீரையா? அய்யோ வேண்டாம் என்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் அலறி ஓடுவார்கள். எதை நாம் வேண்டாம் ஒதுக்குகிறோமோ? அதில் தான் எண்ணற்ற நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. ஆம் கீரைகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

என்ன தான் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கீரைகள் கொண்டிருக்கிறது என்றாலும், குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதால் வீடுகளில் அடிக்கடி செய்து தர மாட்டோம். இனி இந்ந கவலை வேண்டாம். குழந்தைகள் இந்த ரெசிபி தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு சுவையான கீரையை வைத்து சுவையான பாஸ்தா செய்து தரலாம். புரோட்டீன் நிறைந்த கீரை பாஸ்தாவை எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் இங்கே..

புரோட்டீன் நிறைந்த கீரை பாஸ்தா:

தேவையான பொருட்கள்:

  • பாஸ்தா - அரை கப்
  • அரைத்த பாலக்கீரை - ஒரு கப்
  • முந்திரி - 20
  • குடை மிளகாய் - 2
  • சீஸ் துருவியது- சிறிதளவு
  • பூண்டு - 1 பல்
  • பால் - அரை கப்
  • உப்பு - சிறிதளவு
spinach

மேலும் படிக்க:ஆந்திர ஸ்டைலில் உருளைக்கிழங்கு வெண்டை பொரியல் செய்துக் கொடுங்க; சுவை வேற லெவலில் இருக்கும்

கீரை பாஸ்தா செய்முறை:

  • குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கீரை பாஸ்தா செய்வதற்கு முதலில், குடை மிளகாய், பூண்டு போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பசலைக்கீரையை 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கீரை ஆறியவுடன் அதனுடன் முந்திரி, பனீர் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து எடுத்து வைத்துள்ள அரை கப் பாஸ்தாவை 10 நிமிடங்களுக்கு மட்டும் வேக வைக்க வேண்டும். குறிப்பாக குழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சுவை இருக்காது.

மேலும் படிக்க:தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை ரெசிபி; டேஸ்ட் வேற லெவல்

  • பாஸ்தா வேகவைத்தும், கீரையை அரைத்த பின்னதாக ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பூண்டு வதங்கியதும் 5 நிமிடத்திற்குப் பின்னதாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
  • சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் அதனுடன் கொஞ்சம் க்ரீம், பால் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
  • காரம் தேவையென்றால் சிறிதளவு மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதோடு வேக வைத்து அரைத்த பசலைக் கீரை விழுது போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • இவற்றையெல்லாம் சிறிது நேரம் வேகவைத்து எடுத்தால் போதும் சுவையுடன் புரதம் நிறைந்த கீரை பாஸ்தா ரெடி.
  • இதுபோன்ற முறைகளில் கீரையை வைத்து பாஸ்தா செய்யுங்கள். நிச்சயம் இதன் சுவை குழந்தைகளை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

குறிப்பு: பசலைக்கீரை தான் சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. கசப்புத்தன்மை குறைவாக இருக்கும் கீரைகளை.வைத்தும் சமைக்கலாம். சுவைக்காகத் தானா சீஸ் சேர்க்கிறோம் என்பதால் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தவும்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP