புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது எப்படி?

சுவைமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம்.

how to do srivilliputhur palkova

அன்றும் இன்றும் என்றும் இதன் சுவை மாறாது என்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா உலகப் பிரசித்தி பெற்றது. இதற்கு தனி வரலாறும் பல நூற்றாண்டுப் பின்புலமும் உள்ளது. இந்த பால்கோவாவுக்கு இருக்கும் தனித்தன்மை இவை 10 நாட்கள் வரை கெடாது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் இதை வாங்கி செல்லலாம். கெட்டு போய்விடும் என்ற பயமே தேவையில்லை.

சுத்தமான பாலில் சர்க்கரை, நெய் சேர்த்து எந்தவித சுவையூட்டியும் சேர்க்கபடாமல் பாரம்பரியமான முறையில் செய்யப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புராணக் கதைகளும் இலக்கியங்களும் சான்றாக உள்ளன. அதே போல், எவ்வளவோ அறிவியல் மாற்றங்கள் வந்துவிட்ட போதும் அடுப்பை எரிக்க முந்திரிக் கொட்டை ஓடுகளை பயன்படுத்துவதால் நெருப்பு சரியான பதத்தில் நின்று எரிந்து, பால்கோவாவுக்கு தனிச்சுவையை தருகிறது எனவும் கூறப்படுகிறது.

தரம் மற்றும் சுவைக்கு கிடைத்த அங்கீகாரம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இன்று உலக அரங்கில் தனி அடையாளத்துடன் நிற்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் கோவா மட்டுமில்லை பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால்கோவா, கேரட் அல்வா போன்றவையும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்த பதிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரிஜினல் பால்கோவா வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

home made srivilliputhur palkova preparation

  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
  • நெய் –2 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் அடுப்பில் அடிகனமான அகலமான பாத்திரத்தை வைத்து அதில் திக்கான கொழுப்பு நிறைத்த பாலை ஊற்றவும்.
  • கிட்டத்தட்ட 20 நிமிடம் பாலை சுண்ட காய்ச்சவும்.
  • பால் பொங்கி வரும்போது ஏடு மேலே தங்கிவிடும். அதை கரண்டியால் பாலுடன் சேர்த்துவிட்டு விடாமல் கிளறவும்.
  • பால் சுண்டி பாதியளவுக்கு வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து விடாமல் கிளறவும்.
  • பாலை கரண்டியால் விடாமல் கிளறினால் தான் பால்கோவா சரியான பதத்தில் வரும்.

srivilliputhur palkova

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே கடலை மிட்டாய் செய்வது எப்படி?

  • 1 லிட்டர் பால் முழுவதுமாக சுண்டி கெட்டி பதத்திற்கு வந்தபின்பு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  • இதன் மேல் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்.
  • இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • அடுத்து, மீதம் இருக்கும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் கிளறவும்.
  • இப்போது நிறம் மாறி, பால்கோவா சரியான பதத்திற்கு வந்து இருக்கும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
  • சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார்.

நீங்களும் விசேஷ நாட்களில் இந்த செய்முறையை பின்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரிஜினல் பால்கோவாவை வீட்டிலேயே செய்து பாருங்கள். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP