ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெகு விமர்சையாக கடைபிடிக்கப்படும் அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வரலட்சுமி விரதம் இருக்கிறது. ஆனால், இந்த மாதத்தில் ஆடியில் வருகிறது. குறிப்பாக ஆடி வெள்ளி, பெளர்ணமி என பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.
செல்வ செழிப்புக்கு அதிபதியாக திகழும் மகாலட்சுமியை நம் வீட்டிற்கு வரவேற்று வழிபடக்கூடிய சிறப்பான நிகழ்வு தான் வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதத்தை திருமணம் ஆன பெண்களும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வரும் குடும்பத்திற்கு அவர்களது வீட்டில் வறுமை ஒருபோதும் இருக்காது. அதேபோல் கன்னி பெண்களுக்கு திருமண தடை இருக்காது. திருமணமான சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் சிறப்பாக கிடைக்கும் என்பது இந்து மதத்தில் ஐதீகம்.
மேலும் படிக்க: வீட்டில் அமைதியும், செல்வமும் கிடைக்க இந்த திசைகளில் விளக்கேற்றவும்!
வரலக்ஷ்மி விரதத்தின் முக்கிய நோக்கம், தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற லட்சுமி தேவிக்கு உண்மையான பிரார்த்தனைகளைச் செய்வதாகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க கடுமையான விதிகள் எதுவும் இல்லை. சடங்குகள் கடினமானவை அல்ல, வரலக்ஷ்மி தேவியை சாந்தப்படுத்த ஒரு எளிய பிரார்த்தனை கூட போதுமானது.
இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, லட்சுமி தேவி செழிப்பு, செல்வம், அதிர்ஷ்டம், ஞானம், ஒளி, தாராள மனப்பான்மை, தைரியம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் முதன்மையான தெய்வம். பெண்கள், குறிப்பாக திருமணமானவர்கள், லட்சுமி தேவியை மகிழ்விக்கவும், அவரது தெய்வீக அருளைப் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக தேவியிடம் பிரார்த்தனை செய்வதுடன், நல்ல சந்ததிக்கான ஆசீர்வாதத்தையும் பெறுகிறார்கள். வரலக்ஷ்மி விரதம் முதன்மையாக பெண்களுக்கான பண்டிகை மற்றும் பெண்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவம் 'ஸ்கந்த புராணத்தில்' விளக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி விரதத்தில் லட்சுமி தேவி எட்டு வடிவங்களில் வணங்கப்படுகிறாள்
வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி, செம்மை இட்டு, மாக்கோலம் போட வேண்டும்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மண்டபத்தில் வாழை இலை மீது ஒரு படி அரிசியை பரப்பி, வைக்க வேண்டும். பித்தளை செம்பு அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி போட்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு. 1 ரூபாய் நாணயம், எலுமிச்சம் பழம், காதோலை, கருகமணி இவை உள்ள செம்பு கலசம் எனப்படும்.
வாய்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு,அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ, வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணம் தரித்து, அழகூட்ட வேண்டும். வாசலுக்கு அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக, "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேற, எல்லா ஐஸ்வர்யங்கள் தந்து அருள்வாயே என்று கூறி, அம்மனை வாசலில் இருந்து எடுத்து வந்து மண்டபத்தில் கிழக்கு முகம் பார்த்து வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக, உட்கார்ந்து பூஜிக்க வேண்டும்.
மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். மலர்களால் தீபங்களால் அம்பாளை ஆதரித்து, 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவனிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டிவிட சொல்லி, சரடை கட்டி கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் கட்டி விடுதல் வேண்டும். அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி, வழிபட வேண்டும். அஷ்ட லட்சுமி சுலோகம், பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.
லக்ஷ்மிக்கு சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி, தயிர், பசும்பால், நெய், தேன் அல்லது கலந்த சாதம் 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.
இந்த நன்னாளில் பெண்கள் அனைவரும் மகாலட்சுமியை நம் வீட்டிற்கு வரவேற்று தரிசனம் செய்து லட்சுமி தேவியின் அருளைப் பெறுங்கள்.
மேலும் படிக்க: பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபாடு மேற்கொள்ளக் காரணம் இது தான்!
இதுபோன்ற ஆன்மிகம் சார்ந்த சுவாரஷ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com