வீட்டிலேயே கடலை மிட்டாய் செய்வது எப்படி?

உடையாமல் சரியான பக்குவத்தில் கடலைமிட்டாய் செய்ய கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

grandmother recipe to make perfect jaggery chikki

ஒரு முழுமையான உணவு கடலை மிட்டாய் இன்றி நிறைவடையாது. இது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. வயது வரம்பின்றி அனைவரும் விருப்பி உண்ணும் இந்த கடலை மிட்டாயை பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கி சுவைக்கிறோம். ஆனால் அதில் பாதி செலவு செய்தால் போதும், அதை விட நிறைய எண்ணிக்கைகளில் கடலை மிட்டாய் செய்திடலாம்.

வெல்லம் மற்றும் வேர்க்கடலையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த கடலை மிட்டாய் இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு தின்பண்டம் ஆகும். தேங்காய் பர்பி, கடலை மாவு பர்பி, சாமை பர்பி என நாடு முழுவதும் விதவிதமான இனிப்பு தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இதில் கடலை மிட்டாய் பரவலாக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இது குளிர்காலத்தில் அதிகம் தயாரிக்கப்படுகிறது.

கடலை மிட்டாயை வீட்டில் செய்யும் போது அது உடைந்து விடுவது, வெல்லப்பாகை கிளறும் போது கட்டி விழுவது அல்லது கடிப்பதற்கே கஷ்டமாக கடினமாகி விடுவது போன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் இனி கவலை வேண்டாம். இந்த பதிவில் சுலபமாக கடலை மிட்டாய் செய்யும் முறை மற்றும் அதன் தயாரிப்பில் தெரிந்து கொள்ள வெண்டிய முக்கியமான சில குறிப்புகளை பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். படித்து பயனையுடங்கள்.

வேர்க்கடலை வறுத்தல்

கடலை மிட்டாயில் மிகவும் முக்கியமானது வேர்க்கடலை. இதன் சுவையை அதிகரிக்க கடலையை சுத்தமான நெய்யில் முதலில் வறுத்தெடுத்து கொண்டு பின்பு வெல்லத்தில் சேர்க்கவும். அதே போல் வேர்க்கடலையை கடாயில் வறுக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும். ஏனென்றால் சூடு அதிகமாகி விட்டால் கடலை உடனே தீஞ்சு விடும். கடலையை எப்போதுமே தோல் நீக்கிவிட்டு வறுக்கவும்.

  • 1 முதல் 2 கப் வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
  • இப்போது ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி அதில் கடலையை போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.
  • கடலை அதிகமாக வறுப்பட கூடாது. அதிகம் வறுப்பட்டு விட்டால் அது ஒருவிதமான கசப்பு சுவையை ஏற்படுத்தும்.

வெல்லப்பாகு

கடலை மிட்டாய் தயாரிக்க வெல்லப்பாகு மிகவும் முக்கியமானது. பாகு சரியான பதத்தில் இல்லையென்றால் கடலை மிட்டாய் உடைந்து விடும் அல்லது கடினமாகி விடும். . அதே போல் வெல்லப்பாகு தயார் செய்யும் போது சரியான அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும். வெல்லாப்பாகு தயார் செய்யும் போது அதில் கட்டி விழாமல் இருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்

  • வெல்லம் - 200 கிராம்
  • தண்ணீர் - 100 கிராம்
  • ஏலக்காய் - 8
  • நெய் - 4 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 10 நிமிடத்தில் கடலை மாவு இல்லாமலே செய்யலாம் - மொறு மொறு மசாலா வேர்க்கடலை

செய்முறை

barfi recipe

  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
  • கொதி வர ஆரம்பித்ததும் கரண்டியை வைத்து அது கெட்டி பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறவும்.
  • வெல்லப்பாகு சரியான பதத்திற்கு வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள கலவையை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து ஒட்டி பார்க்கவும்.
  • இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வந்தால், உங்கள் வெல்லாப்பாகு தயார் என அர்த்தம்.

உடையாத கடலைமிட்டாய்

வெல்லத்தை சரியான பதத்தில் தயார் செய்த பின்பும் பல நேரங்களில் கடலை மிட்டாய் உடைந்து விடும். அதற்கு காரணம் வெல்லப்பாகு ஆறி போவது தான். ஆறி போன வெல்லப்பாகில் கடலை மிட்டாய் சரியாக வராது. இதை சரிசெய்ய சிறிதளவு நெய்யை சூடுப்படுத்தி வெல்லப்பாகு கலவையில் சேர்க்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: சத்துள்ள சுவையான ஆப்பிள் ஜாமை வீட்டிலேயே செய்வது எப்படி?

கடலை மிட்டாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை - 1 கப்
  • எள்ளு - 1/2 கப்
  • வெல்லம் - 1/2 கப்
  • நெய் - 2 ஸ்பூன்

செய்முறை

how to make kadalaimittai

  • முதலில் வேர்க்கடலை மற்றும் எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு எள்ளை கடாயில் போட்டு சரியான பதத்திற்கு வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.
  • அதே கடாயில் வேர்க்கடலையை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது, கடாயில் வெல்லத்தைப் போட்டு வெல்லப்பாகு தயார் செய்யவும். பாகு சரியான பதத்திற்கு வந்ததும் அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளு சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டவும்.
  • அடுத்து, கத்தியை வைத்து வேண்டிய வடிவத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஆற விடவும்.
  • இப்போது சுவையான கடலை மிட்டாய் தயார்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP