ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பதிவின் மூலமாக உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி என்பதை நாம் பார்ப்போம் வாருங்கள்.
ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பொதுவாக பிள்ளைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு பால் சாப்பிட பிடிக்காது. ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் பாலையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் பாயாசம். இதனை எப்படி செய்வது என்பதனை நாம் படித்தறிந்து பயன்பெறலாம்.
Image Credit: freepik and shutterstock
Herzindagi video
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி என்பதை நாம் பார்ப்போம்
பாலை கொதிக்க விடவும். அது கெட்டியானதும் கடாயில் நெய் ஊற்றி 2 துருவிய ஆப்பிள்களை வறுக்கவும்
பிறகு சர்க்கரை சேர்த்து வேகவிடவும்
பிறகு உலர் பழங்களை சேர்த்து, 5 நிமிடங்களுக்கு பாயாசத்தை வைத்திருக்கவும்
அதனை ஆறவைத்து, பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு, உலர் பழங்களை மேல் தூவி அலங்கரிக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com