herzindagi
image

Hair Care Tips: தேங்காய் மற்றும் இலவங்கபட்டை போதும்; முடி உதிர்வு பிரச்சனை இனி இருக்காது!

முடி உதிர்தல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுகிறீர்களா? நீளமான மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத தலைமுடி வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஒருமுறையாவது தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகித்துப் பாருங்கள்.
Editorial
Updated:- 2025-12-08, 16:56 IST

பெண்கள் எப்போதுமே தங்களது நீளமான மற்றும் அடர்த்தியான முடி வேண்டும் என்று நினைப்பார்கள். சில பெண்கள் தங்களது கூந்தலை முறையாக பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலர் தங்களது கூந்தலைப் பற்றி கவலைக்கொள்வதில்லை. இளமையாக காலத்தில் தங்களது வாசனை வரக்கூடிய ஏதாவது ஷாம்புகளைப் பயன்படுத்திருப்பார்கள். தொடர்ச்சியாக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதால் முடி உதிர்தல் தொடங்கி இளம் வயதிலேயே நரைமுடி பாதிப்பையும் சந்திக்க நேரிடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் தலைமுடியைப் பராமரிக்கவும், முடி உதிர்வைத் தடுக்க வேண்டும் என்றால் தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஹேர் மாஸ்க் பயன்படுத்திப் பாருங்கள்.

தேங்காய் மற்றும் இலவங்கபட்டை ஹேர் மாஸ்க்:

  • பெண்கள் தங்களது உச்சந்தலையிலிருந்து நுனி வரை கூந்தலைப் பராமரிக்க உதவும் தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து ஹேர் மாஸ்க் செய்வதற்கு முதலில் தேவையான இந்த இரு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு சிறிய பவுலில் சிறிதளவு தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து மிதமான சூட்டில் பேஸ்ட் பதத்திற்குத் தயார் செய்துக் கொள்ளவும்.
  • பின்னர் கொஞ்சம் சூடு ஆறியவுடன் பெண்கள் உச்சந்தலையில் இருந்து நுனி வரை நன்கு தேய்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: Hair Care Tips: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்; வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்?

  • அரை மணி நேரத்திற்குப் பின்னதாக தண்ணீரைக் கொண்டு அலசவும். தொடர்ந்து வாரத்திற்கு இருமுறையாவது இந்த ஹேர் பேஸ் பேக் பயன்படுத்தி வரவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியைப் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: சரும பராமரிப்பில் எலுமிச்சை பயன்படுத்தும் நபரா நீங்கள்? இந்த 4 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க

  • தேங்காயில் உள்ள நீர்ச்சத்துக்கள் தலைமுடிக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும், பளபளப்பையும் தருகிறது.

கூந்தல் உதிர்வதற்கானக் காரணங்கள்:

தலைமுடிக்கு எண்ணெய் சரியாகத் தேய்க்காவிட்டாலும், கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் உபயோகித்தல், அதிகப்படியான மாசுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களுக்கு அதிகளவில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தமும் தலைமுடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது.

Image source - Freepik

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com