herzindagi
image

Rose Flower Growing Tips: அழகிய ரோஜா பூக்களை வீட்டில் வளர்க்க ஆசையா? இந்த குறிப்புகளை அவசியம் பின்பற்றவும்

Gardening Tips: அழகான ரோஜா பூக்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். அதன்படி, வீட்டிலேயே எப்படி எளிதாக ரோஜா செடியை வளர்க்கலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-12-23, 15:17 IST

பெரியவர்கள், சிறியவர்கள் என வயது பேதமின்றி பலருக்கும் ரோஜா பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பல வகையான பூச்செடிகளை நாம் வீட்டில் வளர்த்தாலும், ஒரு ரோஜா செடியாவது நம் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். ரோஜா செடி வளர்ப்பது என்பது ஒரு கலை. இதனை வளர்ப்பதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன.

ரோஜா பூக்களை வளர்த்து பராமரிக்கும் முறைகள்:

 

சரியான மண் கலவை, போதிய சூரிய ஒளி மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால், உங்கள் வீட்டு பால்கனியிலும் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்கும். பூச்செடி விற்பனை செய்யும் கடைகளில் இருந்து வாங்கி வந்த ரோஜா செடியை எப்படி தொட்டியில் மாற்றி வைப்பது? அதற்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்? உரம் இடுவது எப்படி? என்பது குறித்த முழுமையான தகவல்களை இதில் காண்போம்.

 

செடியை சரியாக நடவு செய்தல்:

 

ரோஜா செடி வளர்ப்பதில் முதல் படி, அதற்கான சரியான இடத்தையும், தொட்டியையும் தேர்வு செய்வதாகும்.

 

  • தொட்டி தேர்வு: ரோஜா செடியின் வேர்கள் ஆழமாக செல்லும் என்பதால், குறைந்தது 12 அங்குல ஆழம் கொண்ட தொட்டியை தேர்வு செய்வது அவசியம். மேலும், அதிகப்படியான தண்ணீர் வெளியேற தொட்டியின் அடியில் துளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • டெர்ரகோட்டா தொட்டிகள் (Terracotta Pots): களிமண்ணால் செய்யப்பட்ட இந்தத் தொட்டிகள் வேர்களுக்கு போதிய காற்றோட்டத்தை அளிக்கும். ஆனால் மண் விரைவில் காய்ந்துவிடும் என்பதால் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • பிளாஸ்டிக் தொட்டிகள்: இவை எடை குறைவாக இருக்கும் மற்றும் நீண்ட நேரம் ஈரப்பதத்தை தக்கவைக்கும். உங்கள் வசதிக்கேற்ப இதில் ஒன்றை தேர்வு செய்யலாம். பெரிய தொட்டியை தேர்வு செய்தால், வேர்கள் பரவ இடவசதி கிடைக்கும்.
  • மண் கலவை: தோட்டத்தில் உள்ள சாதாரண மண்ணை மட்டும் பயன்படுத்தினால் ரோஜா செடி செழிக்காது. நீர் தேங்காத, வடிகால் வசதி கொண்ட மண் கலவை தேவை. இதை நீங்கள் வீட்டில் தயாரிக்கலாம்.
  • சரியான கலவை: 50 சதவீதம் செம்மண் அல்லது தோட்ட மண், 30% பெர்லைட் (Perlite) அல்லது ஆற்று மணல் மற்றும் 20% மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் இதற்கு தேவைப்படும்.

 

இந்தக் கலவை மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் அதே வேளையில், அதிகப்படியான நீரை வெளியேற்றி வேர் அழுகல் வராமல் தடுக்கும்.

மேலும் படிக்க: நறுமணம் வீசும் மல்லிகையை உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்ப்பதற்கான சிம்பிள் டிப்ஸ் 

 

ரோஜா செடியை நடும் முறை:

 

ரோஜா செடிகளை நடவு செய்வதற்கு வசந்த காலம் அல்லது கோடையின் தொடக்க காலம் மிகவும் சிறந்தது. இது செடியின் இயற்கையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

Gardening Tips

 

  • தொட்டியை நிரப்புதல்: நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மண் கலவையை தொட்டியில் பாதி அளவிற்கு நிரப்பவும்.
  • செடியை நடும் முறை: பையில் இருந்து ரோஜா செடியை எடுக்கும் போது, அதன் வேர்கள் சேதமடையாதவாறு கவனமாக எடுக்க வேண்டும். செடியை தொட்டியின் மையத்தில் வைத்து, மீதமுள்ள மண் கலவையால் நிரப்பவும்.
  • தண்ணீர்: நட்டு வைத்த உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும், மண் ஈரமாக இருக்க வேண்டும். ஆனால், சேறு போன்று தண்ணீர் தேங்கக்கூடாது.

 

செடியை பராமரிக்கும் முறை:

 

ரோஜா செடிகள் நன்கு வளர பிரகாசமான சூரிய ஒளி தேவை. தெற்கு திசையை நோக்கிய ஜன்னல் அல்லது பால்கனி இதற்கு சிறந்தது. அதே சமயம், உச்சி வெயிலின் நேரடி தாக்கம் இலைகளை கருகச் செய்யலாம் என்பதால் கவனம் தேவை.

 

  • தண்ணீர் ஊற்றும் முறை: மண்ணின் மேல் பகுதி காய்ந்துள்ளதா என்று விரல் வைத்து பார்க்கவும். காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்றவும்.
  • நோய் தாக்குதலை தடுக்க வேண்டும்: தண்ணீரை செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இலைகளின் மீது தண்ணீர் ஊற்றினால் பூஞ்சை நோய்கள் வர வாய்ப்புள்ளது.
  • சரியாக உரமிடுவதன் அவசியம்: செடி வளரும் பருவத்தில் 4 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை நீரில் கரையக்கூடிய சீரான உரத்தை பயன்படுத்தலாம். பூக்கும் பருவம் முடிந்த பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உரம் இட்டால் போதுமானது.

மேலும் படிக்க: செம்பருத்தி செடி வளர்ப்பது இனி ரொம்ப ஈசி; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க 

 

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:

 

இவை அனைத்தையும் சரியாக பின்பற்றுவதுடன் சில கூடுதல் குறிப்புகளையும் மேற்கொள்வதன் மூலம் பூக்கள் பூப்பதை அதிகப்படுத்த முடியும்.

Rose Plant Care

 

  • காய்ந்த பூக்களை நீக்குதல்: செடியில் உள்ள பூக்கள் காய்ந்து விட்டால், அவற்றை உடனே பறித்து விட வேண்டும். அப்போது தான் செடியில் புதிய மொட்டுகள் உருவாகும்.
  • தொட்டியின் இடத்தை மாற்றுதல்: சூரிய ஒளியில் செடிகள் செழித்து வளர்ந்தாலும், அதிகப்படியான மற்றும் கடுமையான சூரிய ஒளி சேதத்தை உருவாக்கும். எனவே, அதற்கு ஏற்ப தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் செடியில் அதிக பூக்கள் பூக்கும்.

 

ரோஜா செடி வளர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். சரியான மண் கலவை, அளவான தண்ணீர் மற்றும் போதிய வெளிச்சம் இருந்தால் உங்கள் வீட்டு ரோஜா செடி சீராக வளரும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com