பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்கலாம் என்ற.யோசனை ஒவ்வொரு தாய்மார்களுக்கும் நிச்சயம் இருக்கும். சில நேரங்களில் ஸ்நாக்ஸ் எதுவும் வேண்டாம் அம்மா, நான் சாக்லேட் வாங்குரேன் என்ற வார்த்தைகளை அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். இது போன்று உங்களது குழந்தைகளும் சொல்கிறார்களா? இனி அப்படி சொல்ல மாட்டார்கள்.
குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ? அதை விட சிறந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்துக் கொடுக்கவும். இதற்கு உங்களுக்கு.சிறந்த தீர்வாக அமைவது முட்டையில் செய்யக்கூடிய பணியாரம் தான். இந்த ரெசிபி சுவையோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். மிகவும் சுலபமான முறையில் எப்படி முட்டை பணியாரம் செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ்கள் உங்களுக்காக..
தேவையான பொருட்கள்:
- தோசை மாவு - 3 கப்
- முட்டை.- 2
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி -1
- பச்சை மிளகாய் - 2
- மிளகு தூள் - அரை டீஸ்பூன்
- கடலை எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
மேலும் படிக்க:ஊட்டச்சத்துள்ள கீரை பாஸ்தா செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்
முட்டை பணியாரம் ரெசிபி செய்முறை:
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முட்டை பணியார ரெசிபி செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக்கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தோசை மாவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியையும் உடன் கலந்துக் கொள்ளவும்.
- பணியாரத்திற்கு கூடுதல் சுவை வேண்டும் என்றால் நினைத்தால் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து வைக்கவும். இதோடு கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு மிளகு தூள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
- தற்போது முட்டை பணியாரத்திற்கான மாவு தயார்.
- இதையடுத்து பணியாரக்கல்லை சூடேற்றி விட்டு கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும்.
- சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் எண்ணெய்க்குப் பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- பணியாரத்தைக் கருகவிடாமல் மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
- கார பணியாரம் போன்று இருக்கும் என்பதால் முட்டை பணியாரத்திற்கு உங்களுக்குப் பிடித்த தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து பரிமாறலாம்.
மேலும் படிக்க:உடலுக்கு ஆற்றலை வழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா ரெசிபி டிப்ஸ்
- பள்ளி முடித்துவிட்டு.என்ன சாப்பிடலாம்? என அலைமோதும் குழந்தைகளுக்கு நிச்சயம் புரதம் நிறைந்த முட்டையுடன் செய்யக்கூடிய பணியாரம் சிறந்த தேர்வாக அமையும்.
- இனி மாலை நேரத்தில் என்ன ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்கலாம்? என்ற யோசனையை விட்டு விட்டு சுவையான இந்த முட்டை பணியாரத்தைச் செய்துக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation