herzindagi
pepper prawns easy

Prawn Pepper Fry : ரொம்ப சிம்பிள், ஆனா இது தான் பெஸ்ட் இறால் ரெசிபி!

இறால் மிளகு வறுவல், பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். ஃபிரெஷாக மசாலா இடித்து, பக்குவமாக செய்து சுவைத்துப் பாருங்கள். போதும் என்று சொல்லவே மனம் வராது…
Editorial
Updated:- 2023-08-07, 15:45 IST

நான்வெஜ் உணவுகளை சமைப்பது ரொம்ப ரொம்ப ஈஸியான வேலை. கூட்டு, பொரியல், குழம்பு, ரசம் என வகை வகையாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சைட் டிஷ் போதும், ஒரு தட்டு சோறும் நொடியில் காலியாகிவிடும். கருவாட்டுத் தொக்கு, மட்டன் சுக்கா வறுவல், இறால் மிளகு பிரட்டல் இந்த மாதிரி எது செய்தாலும் அப்படியே சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். கொஞ்சமா நெய், ஒரே ஒரு ஆம்லெட், வேற என்ன வேணும் சொல்லுங்க!

இறாலை சுத்தம் செய்வது கடினம் என நினைத்து பலரும் இதை வாங்கி சமைப்பது கிடையாது. மாறாக ஹோட்டல்களில் விற்கப்படும் இறால்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். முறையாக சுத்தம் செய்யாதே இறால் மிகவும் ஆபத்தானது. இதனுடன் அதிக செலவு செய்து வயிறு நிரம்பாமல் அரைகுறையாக சாப்பிடுவதற்கு பதிலாக நாமே வீட்டில் சமைத்து வயிறார சாப்பிடலாம். இறாலை சுத்தம் செய்ய கற்றுக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிஷத்தில் சமையலையே முடித்து விடலாம். இதற்கான சில டிப்ஸ் மற்றும் இறால் மிளகு வறுவலின் செய்முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்

 

இந்த பதிவும் உதவலாம்: ஓவன் வேண்டாம், நல்லா புசு புசுன்னு பஞ்சு மாதிரி வாழைப்பழ பன் செய்து சாப்பிடுங்க!

 

தேவையான பொருட்கள்

parwn recipes

  • இறால் - ¼ கிலோ 
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன் 
  • மிளகாய் போடி - ½ டீஸ்பூன் 
  • எண்ணெய் - 2 டீஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் - 15
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 
  • கறிவேப்பிலை
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - ½ டீஸ்பூன் 
  • சோம்பு - ½ டீஸ்பூன் 
  • நெய் - 1 டீஸ்பூன் 
  • எலுமிச்சை - ½

செய்முறை

iraal milagu pirattal

  • முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். புதிதாக சமையல் பயில்பவர்கள் தோலுரித்த இறாலையும் வாங்கிக் கொள்ளலாம்.
  • இறாலின் தோலை உரித்த பிறகு அதன் மேல் மற்றும் கீழ் பகுதியின் நடுவே கத்தியால் கீறி விடவும். பின் அதன் உள்ளே இருக்கும் கருப்பான நரம்பு பகுதியை நீக்கி விடுங்கள். இதை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
  • இறாலை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
  • இதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  •  இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • இதனுடன் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நான்கு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இந்த சமயத்தில் வறுத்த மிளகு, சீரகம் மற்றும் சோம்பை லேசாக இடித்துக் கொள்ளலாம்.
  • இறால் வேக அதிக நேரம் எடுக்காது. உங்கள் இறாலினுடைய அளவைப் பொறுத்து சமைக்கும் நேரம் மாறுபடும்.
  • இறால் வெந்த பிறகு கடைசியாக இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
  • சுவையான இந்த இறால் மிளகு வறுவலை சாதத்துடன் பரிமாறங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: அசைவ உணவுகளை மிஞ்சும் சுவையில், வாழைக்காய் கபாப் ரெசிபி!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com