herzindagi
image

வெளுத்து வாங்கும் கனமழையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்!

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்த பட்டியல்கள்.
Editorial
Updated:- 2025-10-21, 23:40 IST


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்துவருகிறது. இந்த மழையின் தாக்கம் இன்னும் தொடர்ந்து நான்கு நீட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைவருக்கும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மழையால் ஏற்படக்கூடிய குளிரை பெரியவர்கள் எப்படியாவது தாங்கிக் கொள்வோம். அதுவே சிறு குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. வழகத்திற்கு மாற்றாக அதீக கவனமுடன் இருக்க வேண்டும். இதோ இன்றைக்கு மழைக்காலத்தில் எப்படி குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது? என்பது குறித்த சில தகவல்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்

மழைக்காலங்களில் குழந்தைகளைப் பராமரிக்கும் முறைகள்:

  • நீங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வந்தால் குழந்தைகளை வெளியில் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செல்பவர்கள் மழைக்காலத்தில் வெளியில் செல்லும் போது ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற மழைக்கால ஆடைகளைப் போட்டு விடவும்.
  • குளிர்காலத்தில் அடிக்கடி குழந்தைகள் சிறுநீர் கழிப்பார்கள் என்பதால், எப்போ்து தூங்க வைத்தாலும் குளிருக்கு இதமான போர்வை அல்லது டவல் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
  • குழந்தைகளை மழை நேரத்தில் ஆங்காங்கே வெளியில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • வீட்டில் தண்ணீர் நின்று இருக்கக் கூடாது; தண்ணீர் தொட்டிகள், குடப்படாத வளர்ப்பு திணைகள் நீக்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் நீர் தேங்கும் இடமெல்லாம் கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com