மழைக்காலங்களில் உடலைக் காக்கும் மசாலா டீ; தயார் செய்யும் முறை!

பருவ நிலை மாற்றம் அனைவரின் உடலுக்கு ஏற்றதாக இருக்காது. சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்க்க இந்த காலங்களில் கொஞ்சம் மசாலா டீயை பருகிப் பாருங்கள்.
image
image

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாகவே காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை வேளைகளில் சாரல் மழையும் மாறி மாறி வருகிறது. இந்த இயற்கை மாற்றம் பூமிக்கு என்னவோ குளிர்ச்சியைத் தந்தாலும், உடலுக்கு பல கேடுகளை விளைவிக்கின்றன. பருவ கால மாற்றங்களில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் ஏற்படும் போது என்ன தான் மருத்துவமனைக்குச் சென்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்கவில்லையென்றால் கட்டாயம் அடிக்கடி தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். வீட்டிலேயே மசாலா டீ தயார் செய்து தினமும் பருகிப் பாருங்கள்.

குளிர்காலத்திற்கு ஏற்ற மசாலா டீ தயார் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  • சீரகம் - 50 கிராம்
  • இலவங்கம் - 50 கிராம்
  • சோம்பு - 50 கிராம்
  • மிளகு - 50 கிராம்
  • ஓமம் - 50 கிராம்
  • சுக்கு - 50 கிராம்
  • பட்டை - 5 கிராம்
  • ஏலக்காய் - 5 கிராம்

masala tea (1)

  • மேற்கூறிய பொருள்களில் பட்டை மற்றும் ஏலக்காய் தவிர பிற அனைத்துப் பொருள்களையும் ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி இதனுடன் தலா 5 கிராம் அளவிற்கு ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு சல்லடையில் சளித்துக் கொண்டால் போதும் மசாலா டீ பவுடர் ரெடி. ஒரு டப்பாவில் அடைத்து 3 மாத காலங்கள் வரை உபயோகிக்கலாம்.

மசாலா டீ பவுடர் பயன்படுத்தும் முறை:

  • வீட்டில் தயார் செய்து வைத்துள்ள மசாலா டீ பவுடரை வைத்து மிகவும் எளிமையாக டீ தயார் செய்யலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மசாலா டீ சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் வடிகட்டிக் கொண்டு அதனுடன் சிறிதளவு பனங்கல்கண்டு சேர்த்து பருகி வரவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், சளி, இருமல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கவும் உதவியாக உள்ளது.

மசாலா டீ - 2

தேவையான பொருட்கள்

  • பச்சை ஏலக்காய் - 3 டீஸ்பூன்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • கிராம்பு - 2 டீஸ்பூன்
  • இலங்கப்பட்டை - 5 கிராம்
  • ஜாதிக்காய் - அரை துண்டு
  • துளசி இலைகள் - 2 டீஸ்பூன்

மேலும் படிக்க:ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே

மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டால் போதும். மசாலா டீக்கான பவுடர் ரெடி. சூடான தண்ணீர் இந்த பவுடரைச் சேர்த்து கொதிக்கவும். இதை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது, பருவ காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP