herzindagi
banana puri recipe easy

Banana Buns : ஓவன் வேண்டாம், நல்லா புசு புசுன்னு பஞ்சு மாதிரி வாழைப்பழ பன் செய்து சாப்பிடுங்க!

வீட்டில் நன்கு பழுத்த  வாழைப்பழம் இருந்தால், ஒருமுறை இந்த மாதிரி பன் செய்து சாப்பிடுங்க. வீட்டில் உள்ள எல்லோரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவாங்க…
Editorial
Updated:- 2023-08-05, 12:21 IST

வீட்டுக்கு கெஸ்ட் வரப்போறாங்களா, ஸ்கூல் விட்டு வந்த குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் செய்யணுமா? கவலைய விடுங்க. இந்த வாழைப்பழத்தை வைத்து ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் செய்து அசத்தலாம். நன்கு பழுத்த வாழைப்பழத்தில் அவ்வளவு சத்துக்கள் இருக்கு, இனி அதை தூக்கி ஏறியாமல் இப்படி சூப்பரான பன் செஞ்சு சாப்பிடுங்க.

இந்த பன் செய்வதற்கு ஈஸ்ட், ஓவன், மைதா போன்ற எந்த விஷயமும் தேவையில்லை. பார்ப்பதற்கு புசு புசுன்னு பூரி போல இருந்தாலும், உள்ளே நல்ல சாஃப்ட்டா பன் மாதிரி இருக்கும். படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறும், இதை மிஸ் பண்ணாம இன்றே செய்து பாருங்கள். வாழைப்பழம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: அசைவ உணவுகளை மிஞ்சும் சுவையில், வாழைக்காய் கபாப் ரெசிபி!

 

தேவையான பொருட்கள்

recipe with ripe banana

  • பழுத்த வாழைப்பழம் - 2
  • கோதுமை மாவு - 1.5 கப்
  • நாட்டு சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
  • ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்(விரும்பினால்)
  • பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன் 
  • தயிர் - ¼ கப்
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை 

soft banana bans recipe

  • முதலில் அகண்ட பாத்திரத்தில் வாழைப்பழம், சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா சேர்ந்து மசித்து, கைகளால் நன்கு அடித்து கொள்ளவும்.
  • அடுத்ததாக உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • நீங்கள் விரும்பினால் இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவு சேர்த்து கிளறவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வாழைப்பழத்தின் அளவை பொறுத்து கோதுமை மாவின் அளவுகள் மாறுபடலாம்.
  • 1 ¼ கப் முதல் 1.5 கப் வரை மாவு தேவைப்படும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தளர்த்தியான பதத்தில் மாவு தயாரித்து கொள்ளவும்.
  • இதை ஈரத் துணையால் மூடி 8 மணி நேரங்களுக்கு புளிக்க விடவும்.
  • 8 மணி நேரம் கழித்து சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து மாவு ஒட்டாத பதத்திற்கு மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளுங்கள்.
  • இதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பூரியை விட சற்று கனமாக திரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • தீயை குறைத்து வைத்து இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும்.
  • இந்த அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள், பாராட்டுக்கள் நிச்சயம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இதை செஞ்சு சாப்பிடுங்க, உங்க வெயிட் லாஸ் ரகசியத்தை ஊரே கேட்கும்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com