herzindagi
weight loss easy breakfast kichadi

Weight Loss Breakfast : இதை செஞ்சு சாப்பிடுங்க, உங்க வெயிட் லாஸ் ரகசியத்தை ஊரே கேட்கும்!

உடல் எடையை குறைக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அதற்கான பலன் கிடைக்கும் போது பட்ட கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும்…
Editorial
Updated:- 2023-08-02, 17:01 IST

உடல் எடையை குறைப்பது நிச்சயம் அழகு சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது. நீங்கள் உடற்பயிற்சி செய்தால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் வயதான காலத்திலும் யாருடைய ஆதரவுமின்றி உங்களால் சுறுசுறுப்பாக வாழ முடியும். படிக்கட்டுகளை ஏறும் போது மூச்சு வாங்காமல் இருக்க, உங்களுடைய வேலைகளை நீங்களே சுயமாக செய்து கொள்ள, உடல் வலிமையுடன் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ உடற்பயிற்சியையும் சரியான உணவு முறையையும் கடைப்பிடியுங்கள்.

உடல் எடையை குறைக்கும் பொழுது காலை உணவை தவிர்ப்பது அல்லது மிகவும் குறைவான உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது மிகவும் தவறானது. இதனால் உடல் எடை குறைந்தாலும், இது நிரந்தர பலன் தராது. எனவே ஒரு முழுமையான காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். எடை குறைய இந்த ஓட்ஸ் குயினோவா கிச்சடியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் ரவா கேக், இனி வீட்டிலேயே செய்யலாம்!

 

தேவையான பொருட்கள்

weight loss breakfast recipe with oats

weight loss breakfast with oats

  • ஓட்ஸ் - ¼ கப் 
  • குயினோவா - ¼ கப் 
  • பாசிப்பருப்பு - ¼ கப்
  • அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பூண்டு 3-5
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பட்டை - 1
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 1
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பச்சை மிளகாய் 3-5
  • தக்காளி - 1
  • தண்ணீர் - 4 கப்
  • மிளகு பொடி - ½ டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு 
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
  • காய்கறிகள் - 1 கப்  

செய்முறை 

weight loss breakfast oats quinoa kichadi

  • முதலில் ஓட்ஸ, குயினோவா, அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து தனித்தனியாக அரை மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். 
  • இப்போது ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்  
  • அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். 
  • இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். 
  • வதங்கிய தக்காளியுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஒரு கப் அளவிற்கு சேர்த்து கொள்ளவும். இதற்கு கேரட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கேப்ஸிகம், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். 
  • காய்கறிகளை லேசாக வதக்கிய பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • இந்த சமயத்தில் ஊற வைத்துள்ள ஓட்ஸ், குயினோவா, அரிசி மற்றும் பாசி பருப்வை தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். (நீங்கள் விரும்பினால் பிரவுன் ரைசையும் பயன்படுத்தலாம்) 
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது வடித்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறவும். 
  • தேவையான அளவு உப்பு சேர்த்தபின் குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். 
  • பிரஷர் அடங்கிய பிறகு மிளகுப்பொடி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம். நீங்கள் விரும்பினால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். 
  • சுவையான இந்த கிச்சடியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து பாருங்கள். இந்த டேஸ்டியான காலை உணவு உங்களுடைய உடல் எடையை குறைக்க நிச்சயம் உதவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: செம டேஸ்ட், வீட்டில் வாழைப்பழம் இருந்தால் இந்த மாதிரி மால்புவா செஞ்சு பாருங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com