herzindagi
image

Weight loss tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த 6 டிப்ஸை அவசியம் ஃபாலோ பண்ணுங்க

Weight loss tips: உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்பற்றக் கூடிய சில எளிய டிப்ஸ்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-26, 11:57 IST

Weight loss tips: உடல் எடையை குறைப்பது என்பது தோற்றம் தொடர்பானது மட்டுமல்ல. வயிறு பகுதியை சுற்றி இருக்கும் கொழுப்பு என்பது இருதய நோய், நீரிழிவு நோய், ஃபேட்டி லிவர் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். இந்த கொழுப்பை குறைக்க நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய சில எளிய வழிமுறைகளை இதில் காணலாம்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் மூக்கடைப்பு, சைனஸ் தொல்லையா? இதோ எளிய தீர்வுகளும், தடுப்பு முறைகளும்!

 

காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய வழிமுறை:

 

காலை எழுந்தவுடன் சுடுதண்ணீருடன் சேர்த்து ஊறவைத்த சியா விதைகள் அல்லது ஆளிவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது நமது செரிமானத்தை சீராக்கி, உணவு எடுத்துக் கொள்ளும் இடைவெளியை சமன் செய்கிறது. அதன்படி, இந்த பழக்கத்தை நாள்தோறும் கடைபிடிக்கலாம். குறிப்பாக, கரையக்கூடிய நார்ச்சத்து வயிற்றில் விரிவடைந்து, செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது கொழுப்பு உறிந்துகொள்ளப்படுவதையும் குறைக்கிறது. இந்த சிறிய பழக்கம், செரிமான அமைப்பை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், நாள் முழுவதும் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவும் உதவும்.

Belly fat

 

இரவு உணவை விரைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்:

 

உறங்கச் செல்வதற்கு குறைந்தது சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களது இரவு உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இப்படி செய்வது கொழுப்பு மெட்டபாலிசத்தை (Fat metabolism) மேம்படுத்துகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகளை இரவு சீக்கிரமாக சாப்பிடும் போது, அவற்றை ஆற்றலாக மாற்றுவதற்கு உடல் சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக இரவு உணவை விரைவாக சாப்பிட வேண்டும்.

 

நாள் முழுவதும் பின்பற்றக் கூடிய பழக்கங்கள்:

 

நாள் முழுவதும் சுறுசுறுப்பான செயல்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு லிஃப்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது, செல்போனில் பேசும் போது வேகமாக நடப்பது, டி.வி பார்க்கும் போது சில எளிய உடற்பயிற்சிகளை செய்வது போன்றவற்றை பின்பற்றலாம். இதன் மூலம் கணிசமான அளவு கலோரிகளை உங்களால் குறைக்க முடியும்.

மேலும் படிக்க: Triphala suranam benefits: திரிபலா சூரணம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

 

உணவு பொருட்களில் கவனம் தேவை:

 

நமது அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில எளிய பொருட்கள் கூட உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். காலையில் சீரக தண்ணீர் அருந்துவது, உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது, தேநீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை எடுத்துக் கொள்வது ஆகியவை தொப்பையை குறைக்க உதவும். இவை சுவையை அதிகரிப்பதுடன், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. இதனால் இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.

Weight loss tips in tamil

 

புரதச்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:

 

ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது இயற்கையாகவே கொழுப்பை கரைக்க உதவுகிறது. பருப்பு, பனீர், முட்டை, முளை கட்டிய பயிறுகள் அல்லது சிக்கன் போன்றவற்றை சேர்ப்பது உடலின் மெட்டபாலிசத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கிரெலின் (Ghrelin) எனப்படும் பசியைத் தூண்டும் ஹார்மோனை புரதம் குறைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. தசைகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு புரதம் பெரிதும் உதவுகிறது.

 

தூக்கத்தின் அவசியம்:

 

தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பில் தூக்கம் முக்கிய இடம் வகிக்கிறது. தினமும் இரவு 10:30 மணி முதல் காலை 6:30 மணி வரை சீரான தூக்கத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் மற்றும் இன்சுலின் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது. இந்த இரண்டு ஹார்மோன்களும் கொழுப்பு சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நல்ல ஓய்வு எடுத்த உடல் அடுத்த நாள் உணவுத் தேர்வுகளிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

 

இத்துடன் சேர்த்து சீரான உடற்பயிற்சி இருந்தால் உங்களது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com