உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க

உடல் எடையை குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸை எவ்வாறு தயாரித்து குடிக்கலாம் என்று இதில் பார்க்கலாம். மேலும், பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்தும் காணலாம்.
image
image

உடல் எடை குறைப்பில் பூசணிக்காயின் பங்கு என்னவென்று இந்த செய்திக் குறிப்பில் காண்போம். இது தொப்பையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் அடிப்படையான விதிகள். இவை இரண்டில் ஒன்றை கடைபிடிக்காமல் உடல் எடையை குறைப்பது என்பது இயலாத காரியம். உடல் எடை குறைப்பு என்பது ஒரே இரவில் நடந்து விடக்கூடிய அதிசயம் அல்ல. இது ஒரு தொடர் முயற்சி. எனினும், சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் இந்த செயல்முறையை விரைவுபடுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வழிகளில் ஒன்றுதான் பூசணிக்காய் ஜூஸ்.

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்:

இது இந்திய மற்றும் சீன உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பூசணிக்காயில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், இது பாரம்பரிய சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இதில் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது 96% நீர்ச்சத்து மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது.

Weight loss juice

பூசணிக்காயில் உள்ள சத்துகள்:

100 கிராம் பூசணிக்காயில் 13 கலோரிகள், 1 கிராமுக்கும் குறைவான புரதம், 3 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து 1 கிராமுக்கும் குறைவான கொழுப்பு ஆகியவை உள்ளன. இது தவிர, பூசணிக்காயில் சிறிதளவு இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகளும் உள்ளன.

மேலும் படிக்க: குழந்தை பிறப்புக்கு பிறகு தலைமுடி உதிர்வு அதிகமானால் தாய்மார்கள் இந்த பானத்தை குடிக்கவும்

உடல் எடை குறைப்பில் பூசணிக்காயின் பங்கு:

பூசணிக்காயில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால், இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, உடல் எடையை திறம்பட குறைக்க உதவுகிறது. மேலும், இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான செயல்முறையை மெதுவாக்கி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் உணர உதவுகிறது.

Weight loss tips

பூசணிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை:

முதலில் பூசணிக்காயின் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் விதைகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். நறுக்கிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை வடிகட்டி, ஜூஸை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 2-3 புதினா இலைகளை சேர்க்கலாம்.

இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP