herzindagi
instant ragi idli recipe

Ragi idli Recipe : உடல் எடையைக் குறைக்க உதவும் ராகி தட்டு இட்லி!

உங்கள் காலையை ஆரோக்கியமாக தொடங்கிட வேண்டுமா? சாதாரண இட்லிக்கு பதிலாக ராகி இட்லி சாப்பிட்டு பாருங்கள். 
Editorial
Updated:- 2024-02-22, 16:00 IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் உணவு ராகி தட்டு இட்லி. இது மிகவும் ருசியாக இருக்கும். வழக்கமாக இரண்டு இட்லி சாப்பிடும் நாம் ராகி தட்டு இட்லி ஒன்று சாப்பிட்டாலே போதும் வயிறு முழுவதும் நிரம்பி விடும். தட்டு இட்லியாக இருப்பதால் முழுமையான உணர்வும் கிடைக்கும். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் வீட்டில் இருப்பவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ராகி இட்லி செய்யத் தேவையானவை

  • இட்லி அரிசி
  • ராகி
  • தண்ணீர்
  • உளுந்து
  • வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்

ragi idli recipe

கவனம் கொள்க

  • ஒன்றரை கப் ராகி, அரை கப் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீரில் மூன்று நான்கு முறை நன்கு கழுவுங்கள். ஏனென்றால் ராகியில் மண், தூசி நிறைய இருக்கும்.  நீங்கள் இட்லி அரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசியும் பயன்படுத்தலாம்.
  • இதே போல அரை கப் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவுங்கள். இவை இரண்டையும் ஒரு இரவு அதாவது குறைந்தது ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மேலும் படிங்க ஆரோக்கியமான கேரளா ஸ்டைல் புட்டு, கடலை கறி சமையல்

ராகி தட்டு இட்லி செய்முறை

  • முதலில் இரவு முழுவதும் ஊறிய ராகி மற்றும் இட்லி அரிசியை கிரைண்டரில் அரைத்துவிடுங்கள். அதன் பிறகு உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து அதை அரைத்து வைத்திருக்கும் ராகி - இட்லி மாவுடன் சேர்த்து விடுங்கள்.
  • இதனிடையே கால் கப் அவுல் தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் உளுத்தம் பருப்பு அரைக்கும் போது சேர்த்து அரைக்கவும்.
  • உளுத்தம் பருப்பை பேஸ்ட் போல அரைக்கவும். அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து தேவையான அளவு உப்பு சேர்த்து மாவு புளிக்க ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்
  • தமிழகத்தில் பெரும்பாலான பாத்திர கடைகளில் இட்லி குழி மீடியம் சைஸ் அல்லது சிறிய சைஸில் குழி இருக்கும். ஆனால் கர்நாடகாவில் பெரும்பாலான கடைகளில் தட்டு இட்லி பாத்திரம் தான் இட்லியை அவிக்க பயன்படுத்துவார்கள். எனவே நீங்கள் தட்டு இட்லி செய்ய ஆன்லைனில் தட்டு இட்லி பாத்திரம் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • இப்போது தட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி ராகி இட்லி மாவை அதில் முக்கால் அளவிற்கு ஊற்றவும்.
  • ராகி வேக நேரம் எடுக்கும். எனவே 20 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் இட்லியை வேக வைக்கவும்.
  • காரச் சட்னி, தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் இது பக்காவான காம்போவாக இருக்கும்.

மேலும் படிங்க கர்நாடகா ஃபேமஸ் உடுப்பி சாம்பார் செய்முறை

இது போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சமையல் கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com