-1764176548929.webp)
இக்காலத்து ஆண்கள், பெண்கள் என இருவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் பருமன். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்களால் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்வதால் தேவையில்லாத கொழுப்புகள் சேர்கிறது. அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் உடலுக்கு பல வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த உணவுகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பு செல்களை வெட்டுவதில் வேலை செய்கின்றன. நீங்கள் அனைத்து வகையான உணவு முறைகளையும் பின்பற்றி சோர்வாக இருந்தும் உங்கள் எடை குறையவில்லை என்றால், நீங்கள் இவற்றை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அவை என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
ஆப்பிள், தயிர் மற்றும் பேரிக்காய்: இவற்றில் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், நார்ச்சத்து குடலையும் சுத்தப்படுத்துகிறது. பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களையும் சாப்பிடுவது முக்கியம். அப்போது தான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க உதவும். இதோடு செரிமான அமைப்புக்கு நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இரண்டையும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: உடல் மெலிவாக காணப்படுகிறீர்களா? ஆரோக்கியமாக எடையை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
முட்டை, காபி மற்றும் ஓட்ஸ்: இவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, நாள் முழுவதும் வயிறு நிரம்பிய மனநிலையைக் கொடுக்கும்.வயிற்றை நன்றாக நிரப்புவதோடு மட்டுமல்லாமல் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களையும் வழங்கும்.
உலர் பழங்கள் எப்போதும் பாரம்பரிய உணவின் ஒரு பகுதியாகும், ஏனெனில் அவை பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எடை சமநிலையையும், கொலஸ்ட்ரால் அளவையும் பராமரிக்கவும், ஆற்றலை வழங்கவும் வேலை செய்கின்றன. இதோடு தோலுடன் நன்கு வறுத்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறைந்த கலோரிகள் உடலில் சேர்வதோடு உடலுக்குத தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
மேலும் படிக்க: Weight loss tips: உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவும் விதைகள்; இதை நோட் பண்ணுங்க மக்களே
குறிப்பாக உடல் எடையைக் குறைக்க முயற்சியில் இருப்பவர்கள் கட்டாயம் பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி அல்லது வெள்ளரிக்காய் போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் நல்லது, ஆவியில் லேசாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. அப்படியே சாப்பிடுவது சிலருக்குப் பிடிக்காது என்பதால் கொஞ்சம் ருசிக்காக உப்பு, எலுமிச்சை சாறு, சாட் மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
Image source - Freep
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com