-1763563514937.webp)
இன்றுள்ள நவீன வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு மாற்றங்களால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் பருமன். உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்க அதனுடன் சேர்ந்து பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என பல முயற்சிகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் பல நேரங்களில் மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது.
இன்றைய காலத்துப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமணம் தாமதம் ஆவதற்கும், குழந்தைப் பிறப்பு தள்ளிப்போவதற்கும் அவர்களது உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. சீக்கிரம் தங்களுக்கான பிரச்சனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக குறைந்த மாதத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கேற்ப தொலைக்காட்சி மற்றும் சோசியல் மீடியாக்களில் ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்கலாம் என்ற விளம்பரங்களும் வருகிறது. இவற்றையெல்லாம் நம்பலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த சமயத்தில் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதுவும் 3 மாதங்களில் எப்படி உடல் எடையைக் குறைக்க முடியும் என்றும் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: Benefits of curd: உங்கள் அன்றாட உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் அற்புத பயன்கள்
அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலர் டயட் என்கிற பெயரில் உணவை முற்றிலும் தவிர்க்கின்றனர். அது முற்றிலும் தவறு. வழக்கமாக சாப்பிடும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதே வேளையில் அதிகமாக சாப்பிடுவதற்குப் பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக காலையில் 9 மணிக்குள் காலை உணவு சாப்பிட வேண்டும். ஓட்ஸ், இட்லி, சப்பாத்தி, கஞ்சி போன்ற ஏதாவது ஒன்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மதியம் சாதம் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கொஞ்சமாக சாதம் எடுத்துக் கொள்ளவும். இதோடு நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைப் பொரியலாக செய்து சாப்பிடலாம். தயிர் மற்றும் சாலட் அதிகம் சாப்பிடுவது நல்லது. மாலை வேளையில் கொள்ளு, சுண்டல் போன்ற பயிர்களில் ஏதாவது ஒன்றை வேக வைத்து சாப்பிடலாம். பழங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. இரவு 7 மணிக்குள் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: சூடான தண்ணீர் குடித்து வந்தால் போதும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க முடியும்!
இதோடு மட்டுமின்றி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங் , நீச்சல் போன்ற ஏதாவது கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
Image source - Freep
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com