
குளிர்காலம் தொடங்கிவிட்டால் சில உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது வழக்கம். குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக சளி, இருமல், செரிமான கோளாறுகள் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு சூடு தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். அந்த வகையில், குளிர்காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த ஒரு தானியம் என்றால் அது கேழ்வரகு.
இந்த சிறுதானியம், பல நூற்றாண்டுகளாக நம் உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஊட்டச்சத்துகளின் சுரங்கம் என்று கூறலாம். குறிப்பாக, குளிர்காலத்தில் கேழ்வரகு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் குறித்து விரிவாக காணலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி பாதிக்கப்படுவது சளி மற்றும் காய்ச்சலால் தான். காற்றில் பரவும் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராட உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் அவசியம்.
மேலும் படிக்க: Winter Diet: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? சிம்பிள் டயட் டிப்ஸ்
குளிர்காலத்தில் பலரும் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல். குளிர் காலத்தில் நாம் தண்ணீர் குறைவாக குடிப்பதாலும், உடல் உழைப்பு குறைவதாலும் இந்த சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குளிர்காலத்தில் இயல்பாகவே பசி அதிகமாக எடுக்கும். இதனால் சூடான பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்கள் அல்லது இனிப்பு பண்டங்களை சாப்பிட தோன்றும். இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் படிக்க: Foods for Liver Health: குளிர்காலத்தில் கல்லீரலில் இருந்து நச்சுகளை இயற்கையாக வெளியேற்ற உதவும் 5 உணவுகள் இதோ
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளிர்காலம் சற்று சவாலானது. ஆனால், கேழ்வரகு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.

இது குளிர்காலத்திற்கு உரித்தான ஒரு சிறப்பு நன்மையாகும். கேழ்வரகு இயற்கையாகவே உடலுக்கு வெப்பத்தை அளிக்கக்கூடியது.
அதன்படி, ருசிக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் இந்த குளிர்காலத்தில் கேழ்வரகை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களை நோய்களிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com