herzindagi
no oil channa masala recipe

Channa Masala : எண்ணெய் சேர்க்காத ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா ரெசிபி

எண்ணெய் இல்லாமல் சென்னா மசாலா செய்ய முடியுமா? ரெஸ்டாரன்ட் சுவையில் ஒரு அற்புதமான சென்னா மசாலாவின் செய்முறையை இப்பதிவில் பார்க்கலாம்…
Editorial
Updated:- 2023-04-14, 09:46 IST

என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்னா மசாலா தான். லேசான புளிப்பு சுவையுடன் இருக்கும் இந்த மசாலாவை கொண்டைக்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டால் பூரிக்கு இனி சென்னா மசாலாவை தவிர வேறு எதையும் விரும்ப மாட்டீர்கள்.

ஆனால் பெரும்பாலும் உணவகங்களில் பரிமாறப்படும் சென்னா மசாலாவில் எண்ணெய் அதிகம் இருக்கும். எண்ணெய் முற்றிலும் இல்லாமல், அதேசமயம் சுவைக்கு எவ்வித குறையும் இன்றி ஒரு தரமான சென்னா மசாலாவை வீட்டிலேயே செய்யலாம். இதற்கான செய்முறையில் இப்பதிவில் படித்தறிந்து நீங்களும் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: நீர்க்கட்டி பிரச்சனையுள்ள பெண்களுக்கான ஸ்மூத்தி ரெசிபி

தேவையான பொருட்கள்

channa batura

  • கொண்டைக்கடலை - 1 கப்
  • 2-3 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • நெய் - ½ டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பிரியாணி இலைகள் 2-3
  • ஏலக்காய் - 2
  • கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
  • கிராம்பு 5-6
  • இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரக தூள் - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • சென்னா மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
  • உலர்ந்த மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
  • கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

செய்முறை

home made chana masala recipe

  • இரவு முழுவதும் அல்லது குறைந்தது 6 மணி நேரங்கள் ஆவது கொண்டக்கடலையை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போன்ற மசாலா பொருட்களை ஒரு வெள்ளை துணியில் வைத்து கட்டிக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள கொண்டக்கடலையுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு மற்றும் மசாலாவை கட்டி வைத்துள்ள துணியையும் வைத்துக் கொள்ளவும். 5-6 விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் நெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
  • இதனுடன் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்னர் கடலை மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் சென்னா மசாலா சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
  • மசாலா நன்கு வறுபட்டவுடன் வேக வைத்துள்ள கொண்டக்கடலையை சேர்த்து கலக்கவும்.
  • இப்போது உலர்ந்த மாங்காய் பொடி மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • மசாலா நல்ல திக்கான பதத்திற்கு வந்த பிறகு கஸ்தூரி மேத்தி இலைகளை சேர்க்கவும். கஸ்தூரி மேத்தி இல்லாதவர்கள் கொத்தமல்லி இலையையும் பயன்படுத்தலாம்.
  • நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் இந்த அற்புதமான சென்னா மசாலாவை பரிமாறலாம்.
  • பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எண்ணெய் சேர்க்காத இந்த சென்னா மசாலா ரெசிபியை நீங்களும் அமைத்து ருசியுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: அறுசுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெசிபி

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com