Tamil New Year Recipes : அறுசுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெசிபி

சுலபமாக செய்யக்கூடிய இந்த வேப்பம்பூ ரசத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. இதன் செய்முறையை இப்பதிவில் படித்தறியலாம்…

tamil new year special vepam poo rasam recipe

உணவில் அறுசுவைகளை சேர்க்கும் படி பல நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். மற்ற சுவைகளுடன் ஒப்பிடுகையில் கசப்பு சுவையை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. இருப்பினும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு சில முறையாவது கசப்பு சுவையை உணவில் சேர்க்க வேண்டும். அதிலும் மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.

தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம் போன்ற அறுசுவை உணவுகள் பரிமாறப்படும். பண்டிகை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களிலும் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை சமைத்து பரிமாறலாம். இதுவரை வேப்பம்பூ ரசத்தை நீங்கள் சுவைத்ததில்லை என்றால், ஒருமுறை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். சுவையும் மனமும் நிறைந்த இந்த ஆரோக்கியமான ரசத்தை அடிக்கடி செய்வீர்கள். வேப்பம்பூ ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இப்போது விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வேப்பம் பூ - 1 டீஸ்பூன்
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
spices for vepam poo rasam

தாளிப்பதற்கு தேவையானவை

  • கடுகு - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 2-3
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • பெருங்காயம் - ⅛ டீஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

vepam poo rasam

  • அரை கப் வெந்நீரில் புளியை அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். பின்பு கைகளால் நன்கு பிசைந்து புளி சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் வெப்பம் பூவை சேர்த்து வறுக்கவும். குறைந்த தீயில் வைத்து, அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும்வரை வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். இதனை நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • இப்போது ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • இதனுடன் புளிச்சாறு, உப்பு, வெல்லம் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுப்பை அணைத்த பின் வறுத்த வெப்பம் பூவை சேர்த்து நன்றாக கலக்கவும். வேப்பம் பூவை சேர்த்த பிறகு கொதிக்க விட வேண்டாம்.
  • வருகிற தமிழ் புத்தாண்டிற்கு இந்த வித்யாசமான ரசம் ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். ஆரோக்கியமும், சுவையும், மணமும் நிறைந்த இந்த அற்புதமான வேப்பம்பூ ரசத்தை உண்டு நோய்களை விரட்டிடுவோம்.

இந்த பதிவும் உதவலாம்: நீர்க்கட்டி பிரச்சனையுள்ள பெண்களுக்கான ஸ்மூத்தி ரெசிபி

இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: google & freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP