ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே பிரியாணி சாப்பிட வேண்டும் என்பது பல விருப்பமாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்கள் இன்னைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதில் சிலர் சைவ பிரியர்களாக இருக்க வாய்ப்புண்டு. அதன்படி பேச்சுலர்கள் ஒரு மணி நேரத்தில் சுலபமாக சமைக்க கூடிய பன்னீர் புர்ஜி பிரியாணியின் செய்முறை இங்கே
இதை சைவப் பிரியர்களின் கனவு பிரியாணி என்றே சொல்லலாம். பன்னீர், குடை மிளகாய் போட்டு மசாலா தயாரித்து அதில் வேக வைத்த பாஸ்மதிரி அரிசியை போட்டு பிரியாணி செய்யப் போகிறோம். இது காரம், புளிப்பு, வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் வண்ணமயமான பிரியாணி ஆகும். நீங்கள் பாஸ்மதி அரிசியை ஏற்கெனவே வேக வைத்து ரெடியாக வைத்திருந்தால் பத்து நிமிடத்தில் இந்த பிரியாணியை தயாரித்து விடலாம். என்னது பத்து நிமிடங்களில் பிரியாணி தயாரிப்பா என நீங்கள் சந்தேகித்தால் கடிகாரத்தில் நேரத்தை கூட குறித்து வைத்து கொள்ளுங்கள்.
பன்னீர் புர்ஜி பிரியாணி செய்முறை
- பாஸ்மதி அரிசி
- பன்னீர்
- நெய்
- பட்டை
- இலவங்கம்
- ஏலக்காய்
- சீரகம்
- பூண்டு
- வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- குடை மிளகாய்
- மஞ்சள் தூள்
- சீரகத் தூள்
- உப்பு
- மிளகாய் தூள்
- கொத்தமல்லி
- தயிர்
கவனம் கொள்க
300 கிராம் பாஸ்மதி அரிசியை நன்கு வேக வைத்து உதிரி உதிரியாக இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். இதை நாம் சமையலின் இறுதியில் சேர்க்க வேண்டும்.
பன்னீர் புர்ஜி பிரியாணி செய்முறை
- அடுப்பில் கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு நான்கு இலவங்கம், ஒரு துண்டு பட்டை மற்றும் மூன்று ஏலக்காய் போட்டு அதை வறுக்கவும்.
- அடுத்ததாக அதில் அரை ஸ்பூன் சீரகம், சிறிதாக நறுக்கிய பத்து பூண்டு போட்டு வாட்டவும்.
- ஒரு பெரிய வெங்காயத்தை போட்ட பிறகு தீயின் வேகத்தை சற்று குறைத்து அவற்றை பொறிக்கவும். ஏனென்றால் அவை மிகவும் பொறிந்து விடக்கூடாது.
- இரண்டு மீடியம் சைஸ் தக்காளிகளையும் நறுக்கி அதில் சேர்க்கவும்.
- இதன் மூன்று பச்சை மிளகாய், தலா ஒரு பச்சை நிற குடை மிளகாய், மஞ்சள் நிற குடை மிளகாய், சிவப்பு நிற குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி கடாயில் கொட்டவும்.
- அடுத்ததாக அரை ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் போடுங்கள்
- அனைத்தையும் நன்றாக் மிக்ஸ் செய்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- இதையடுத்து 200 கிராம் பன்னீரை சிறிதாக நறுக்கி கடாயில் போட்டு இரண்டு நிமிஷத்திற்கு வாட்டவும். தேவையான அளவு கொத்தமல்லி சேர்த்து ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி அடுப்பை ஆப் செய்துவிடுங்கள்.
- இறுதியாக வேக வைத்த 300 கிராம் பாஸ்மதி அரிசியை கடாயில் கொட்டி புர்ஜி மசாலாவுடன் பிரட்டவும். அரை மணி நேரத்தில் பன்னீர் புர்ஜி பிரியாணி ரெடி.
- பத்து பூண்டுகளை எண்ணெய்யில் வறுத்து கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து தயிரில் கொட்டினால் பன்னீர் புர்ஜி பிரியாணியை தொட்டு சாப்பிடுவதற்குமான புரானி ரைத்தாவும் தயார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation