மங்களூரு, கூர்க் போன்ற பகுதிகளில் இது மிகவும் பிரபலமாகும். இதை செய்வதற்கு உங்களுக்கு அரை மணி நேரம் மட்டுமே ஆகும். நீங்கள் விரும்பினால் அக்கி ரொட்டியை வெறுமனே சாப்பிடலாம். ஏனெனில் அதில் காரட், வெங்காயம், குடை மிளகாய் போன்றவை நிறைந்திருக்கும் அல்லது பூண்டு சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும். அதையும் எப்படி செய்வது என இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அக்கி ரொட்டியை செய்வதற்கு நீங்கள் கடைக்குச் சென்று புதிதாகப் பொருட்கள் வாங்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் அரிசி மாவு மற்றும் சில பொருட்களை வைத்து எளிதில் செய்யலாம்.
அக்கி ரொட்டி செய்யத் தேவையானவை
- அரிசி மாவு
- உப்பு
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- குடை மிளகாய்
- வெங்காயம்
- கேரட்
- தேங்காய்
- கொத்தமல்லி
- பெருங்காயம்
- பாலாடை
- பூண்டு
- மிளகாய் தூள்
- நல்லெண்ணெய்
- நெய்
- கொத்தமல்லி
அக்கி ரொட்டி செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் 400 கிராம் அரிசி மாவு போட்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- அதனுடன் மூன்று பச்சை மிளகாய்களை சிறிதாக நறுக்கி போடவும்.
- அடுத்ததாக ஒன்றரை ஸ்பூன் இஞ்சி, நறுக்கிய குடை மிளகாய் ஐந்து ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் பத்து ஸ்பூன், அரை மூடி துருவிய தேங்காய், கொஞ்சம் கொத்தமல்லி, அரை ஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
- இவற்றுடன் மாவிற்கு ஈரப்பதம் கொடுக்கும் ஐந்து ஸ்பூன் பாலேடு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். மாவை ஸ்பூன் கொண்டு கலக்கினால் மணல் போலத் தெரியும்.
- இதையடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் அது சூடான பிறகு அரிசி மாவில் போட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும்.
- 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். இதன் பின்னர் வாழை இலையில் கொஞ்சம் நெய் தடவி அதில் அரிசி மாவை போட்டு கைகளையும் நெய் தடவி ஈரப்படுத்தி வடை தட்டுவது போல் பொறுமையாகத் தட்டி சப்பாத்தி சைஸிற்கு கொண்டு வரவும்.
- அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடான பிறகு தட்டி வைத்திருக்கும் அரிசி மாவுடன் இலையை தலைகீழாக வைக்கவும்
- 15 விநாடிகள் கழித்து தோசைக்கல்-ல் இருந்து வாழை இலையை எடுத்துவிடவும்.
- தற்போது அக்கி ரொட்டி நெய் தடவி தோசை போல நன்கு வேக வைத்து திருப்பவும்.
- மங்களூரு, கூர்க் போன்ற பகுதிகளில் கரி அடுப்பில் அக்கி ரொட்டியை சமைப்பார்கள். பூரி மாதிரி வரும். இதை பெங்களூரின் மிகப் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் எனக் கூறலாம்.
- அக்கி ரொட்டியில் உடலுக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
- தற்போது பூண்டு சட்னி தயாரிக்க போகிறோம். ஆனால் தண்ணீர் சேர்க்கப் போவது கிடையாது.
- 150 கிராம் பூண்டை உறித்து அதை மிக்ஸியில் போட்டு மூன்று ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
- இதனிடையே பேனில் பத்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு போடவும்
- கடுகு பொறிந்தவுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் போடவும். இதனை அப்படியே அரைத்து வைத்திருக்கும் பூண்டின் மீது கொட்டவும். எண்ணெய்யின் சூட்டிலேயே மிக்ஸ் செய்யவும்.
- இறுதியாக பன் மீது ஜாம் தடவுவது போல அக்கி ரொட்டியின் மீது பூண்டு சட்னியை தடவவும். அதன் மீது கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்தால் சுவையான அக்கி ரொட்டி ரெடி.
பார்ப்பதற்கு FULLY LOADED வெஜ் பீட்சா போல இருக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation