Coffee Lovers Recipe : காபி பிடிக்குமா? அப்போ உடனே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க!

உங்களுக்கு காபி குடிக்க மிகவும் பிடிக்கும் என்றால், இப்பதிவில் பகிரப்பட்டுள்ள இரண்டு அற்புதமான டெஸர்ட் ரெசிபிகளும் உங்களுடைய ஃபேவரைட் ரெசிபியாக நிச்சயம் மாறிவிடும்…

coffee lovers recipe coffee cake

தலைவலி, சோகம், சந்தோஷம் எதுவாக இருந்தாலும் முதலில் மனம் தேடுவது ஒரு கப் காபியை தான். ஒரு சிலருக்கு ஸ்ட்ராங்கான காபி பிடிக்கும், ஒரு சிலருக்கு லைட்டான காபி பிடிக்கும். உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால் உங்களுக்கு இப்பதிவில் பகிரப்பட்டுள்ள இரண்டு ரெசிபிகளும் பிடிக்கும்.

அளவுக்கு அதிகமாக காபி அல்லது டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. இருப்பினும் அடிக்கடி காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் இதுபோன்ற ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இது காபி குடித்த அதே திருப்தியை உங்களுக்கு கொடுக்கும். காபியின் மணமும், சுவையும் நிறைந்த இந்த இரண்டு ரெசிபிகளையும் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

காபி ஐஸ்கிரீம்

coffee icecream recipe

தேவையான பொருட்கள்

  • ஹெவி கிரீம் - 2 கப்
  • திக்கான பால் - 1 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
  • இன்ஸ்டன்ட் காபி தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை

  • காபி ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
  • இதில் கிரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
  • இதனுடன் பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் காபி தூள் சேர்க்கவும்.
  • சேர்த்த அனைத்து பொருட்களும் கெட்டியாகவும், லேசாகவும் மாறும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
  • இதனை ஒரு பாக்ஸில் போட்டு பிரீசரில் வைக்கவும்.
  • இதை குறைந்தது ஆறு மணி நேரமாவது உறைய வைக்க வேண்டும். முடிந்தால் இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
  • சுவை நிறைந்த இந்த காபி ஐஸ்கிரீமை உங்கள் குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.

காபி கப் கேக்

coffee cup cakes

தேவையான பொருட்கள்

  • கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
  • கோதுமை மாவு - 50 கிராம்
  • காபி தூள் - 1 டீஸ்பூன்
  • பிரவுன் சர்க்கரை - 75 கிராம்
  • முட்டைகள்,- 2
  • தண்ணீர் - 1/4 கப்

செய்முறை

  • முதலில் காபி தூளை கால் கப் வெந்நீரில் கலந்து வைக்கவும்.
  • இப்போது ஒரு கிண்ணத்தில் முட்டை மற்றும் பிரவுன் சுகர் சேர்த்து கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு அடிக்கவும்.
  • அடுத்ததாக கோதுமை மாவு மாவு, கோகோ பவுடர் மற்றும் காபி நீர் கலவையை சேர்க்கவும்.
  • இந்த மாவை கப் கேக் மோல்டில் ஊற்றி பேக் செய்து எடுக்கலாம். டூத் பிக்கில் மாவு ஏதும் ஒட்டாமல் சுத்தமாக வெளியே வரும் பக்குவத்திற்கு வேக வைக்கவும்.
  • உங்கள் கப் கேக்கின் அளவை பொறுத்து 20-30 நிமிடங்கள் வரை தேவைப்படலாம்.

இந்த இரண்டு காபி ரெசிபியை நீங்களும் செய்து பகிர்ந்து உண்டு மகிழுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: காலை உணவுக்கு அவல் பொங்கல் செய்து அசத்துங்க! உப்புமா செய்வதை விட இது ஈஸி!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP