இருதய ஆரோக்கியம் என்று சொன்னால், பலருக்கு எண்ணெய் உணவுகளை குறைப்பது, காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது போன்ற விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், உடற்பயிற்சியும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க
இதயம் என்பது ஒரு தசை. உங்கள் கை, கால்களை போல, இதற்கும் வேலை கொடுக்கும் போது தான் அது வலுவடையும். இதற்கு கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை. உங்கள் இதய துடிப்பை அதிகரிக்க செய்யும் மற்றும் நீங்கள் விரும்பி செய்யும் பயிற்சிகளே இதற்கு போதும்.
நடைபயிற்சி கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இது இதயத்திற்கான எளிதான ஒரு பயிற்சி. இதற்கு ஜிம், சிறப்பு உடைகள் அல்லது ஒரு திட்டமிட்ட கால அட்டவணை எதுவும் தேவையில்லை. ஒரு ஜோடி ஷூக்கள் மற்றும் சிறிது நேரம் இருந்தால் போதும். நீங்கள் சற்றே மூச்சு வாங்குமளவுக்கு வேகமாக நடந்தால், உங்கள் இதயத்திற்கு தேவையான பயிற்சி கிடைக்கிறது. மெதுவாக நடப்பதால் அதிக பலன் இருக்காது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வேகமாக நடப்பதை இலக்காக கொள்ளுங்கள். இதை இரண்டு 15 நிமிட நடைபயிற்சியாக பிரித்து செய்யலாம்.
சற்று தீவிரமான பயிற்சியை விரும்புபவர்களுக்கு, ஜாக்கிங் ஒரு சிறந்த வழி. நீங்கள் வேகமாக ஓட வேண்டியதில்லை. குறைந்த தூரத்திற்கு ஓடினால் கூட அது இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். ஓட்டம் மற்றும் நடைபயிற்சியை இணைத்து இதைத் தொடங்கலாம். உதாரணமாக, ஒரு நிமிடம் ஓடுதல், இரண்டு நிமிடம் நடத்தல் என மீண்டும் மீண்டும் செய்யலாம்.
சைக்கிள் ஓட்டுவது உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய தசைகளான கால்களுக்கு வேலை தருகிறது. இதனால் உங்கள் இதயம் அதிக வேகமாக இயங்குகிறது. இது ஓட்டத்துடன் ஒப்பிடும்போது முழங்கால்களுக்கு குறைவான அழுத்தத்தைக் கொடுக்கும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இதய நோய் வரும் அபாயம் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு சில முறை 20 முதல் 30 நிமிடங்கள் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது கூட இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும் படிக்க: Health tips for women: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? அப்போ இந்த ஹெல்த் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
நீச்சல் பயிற்சியின் போது இதயமும், நுரையீரலும் கடுமையாக வேலை செய்கின்றன. மெதுவான, நிலையான நீச்சல் கூட உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இது முழு உடலுக்கும் ஒரு பயிற்சி. நீச்சல் பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையை நிர்வகிக்கவும், நுரையீரல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
யோகா, பொதுவாக இதயத்திற்கான பயிற்சி என்று கருதப்படுவதில்லை. ஆனால், இது இதயத்தை பாதுகாக்கும் தனித்துவமான வழிகளை கொண்டுள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. விரைவான யோகா உங்கள் இதய துடிப்பை அதிகரிக்கும். அதே நேரத்தில் மெதுவான வகைகள், அமைதியான சுவாசம் மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மையில் கவனம் செலுத்துகின்றன. இவை இரண்டும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளவை. மன அழுத்தம் இதய நோய்க்கான முக்கியக் காரணம் என்பதால், யோகா மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. தினசரி சிறிது நேரம் யோகா செய்வது உங்கள் இதயத்தையும், மனதையும் இலகுவாகவும், வலுவாகவும் உணரச் செய்யும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com