Masal Vadai Recipe in Tamil: மொறு மொறு சுவையில் அசத்தலான மசால் வடை

மாலை நேர சிறந்த ஸ்நாக்ஸ் மொறு மொறு மசால் வடை எப்படி செய்வது? என்று பார்ப்போம். 

paruppu vadai
paruppu vadai

காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் சூடான டீ அல்லது காபியுடன் வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அதிகம் வைத்து ருசிப்பார்கள். ஆரோக்கியம் அடிப்படையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வே்ண்டும்.

அதே போல் முடிந்தவரை எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம். அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு வெளியில் வடை, பஜ்ஜி போன்ற உணவுகளை வாங்கி தராமல் வீட்டிலேயே சுத்தமான எண்ணெயில் செய்து கொடுங்கள். அந்த வகையில் வீட்டிலேயே மொறு மொறு மசால் வடை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கடலை பருப்பு – 1 கப்
  • வெங்காயம் – 2
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • ரவை – ½ கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2

vadai recipe

செய்முறை

  • முதலில் கடலை பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • பின்பு அதை வடிக்கட்டி பருப்பை மட்டும் தனியாக எடுக்கவும்.
  • பின்பு அதை மிக்ஸியில் வடை பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • இப்போது அரைத்த பருப்புடன் வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு, பச்சை மிளகாய், ரவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பின்பு, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் அதில் மாவை வட்டமாக தட்டி போடவும்.
  • 2 நிமிடம் எண்ணெயில் வடையை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறு மொறு மசால் வடை தயார்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP