
இயற்கையான முறையில் கருமையான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறீர்களா? அப்படி என்றால், கூந்தலை இயற்கையாகவே கருமையாக்கி, வேர்களை வலுப்படுத்தும் மருதாணி எண்ணெய்யை எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என்று இதில் காணலாம்.. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தல் கருமையாக மாறுவதுடன், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
முதலில் இதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 1 கப், மருதாணி பொடி 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு, வெந்தயம் 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இனி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

இத்துடன், இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடியை சேர்க்கவும். மேலும், சிறிதளவு கறிவேப்பிலையை நன்றாக நசுக்கி எண்ணெயுடன் சேர்க்க வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடாக்கவும். குறிப்பாக, எண்ணெய் சற்று நிறம் மாறும் வரை சூடாக்க வேண்டும். அதிக நேரம் சூடாக்குவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்ததும் அடுப்பில் இருந்து எண்ணெய்யை இறக்கி விடலாம்.
மேலும் படிக்க: பயோட்டின் குறைபாடா? கவலையே வேண்டாம், உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் சத்தான உணவுகள்
இந்த எண்ணெய் கலவை முழுமையாக ஆறிய பின், ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டியால் எண்ணெய்யை வடிகட்டவும். இவ்வாறு வடிகட்டிய எண்ணெய்யை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுக்கான மருதாணி எண்ணெய் தயாராகி விடும்.

இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். குறைந்தது ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து, பின்னர் தலைக்கு குளிக்கவும். தொடர்ந்து இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கூந்தல் இயற்கையாகவே கருமையாகவும், பளபளப்பாகவும் மாறுவதை நீங்கள் காணலாம். மேலும், முடி உதிர்வும் குறையும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com