Baby Potato Fry : மனதை கொள்ளையடிக்கும் பேபி உருளைக்கிழங்கு கறிவேப்பக்

ஆந்திரா ஸ்பெஷல் சமையலில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது பேபி உருளைக்கிழங்கு கறிவேப்பக். எளிதாக சமைத்து அனைவருடனும் ருசிக்கலாம்

Main baby
Main baby
ஆந்திரா ஸ்பெஷல் சமையலில் இதுவரை கோங்குரா சட்னி, கோங்குரா புளுசு, ஸ்டைல் சிக்கன் ஃபிரை, சிக்கன் கோடி வேப்புடு எப்படி செய்வது என பகிர்ந்துள்ளோம். இந்த சமையல் ரெசியில் பேபி உருளைக்கிழங்கை கொண்டு கறிவேப்பக் செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்

கறிவேப்பக் செய்யத் தேவையானவை

 baby

  1. பேபி உருளைக்கிழங்கு
  2. கறிவேப்பிலை
  3. கடலெண்ணெய்
  4. பச்சை மிளகாய்
  5. வெங்காயம்
  6. தக்காளி
  7. இஞ்சி - பூண்டு விழுது
  8. மஞ்சள் தூள்
  9. தனியா தூள்
  10. மிளகாய் தூள்
  11. புளி
  12. உப்பு
  13. வெல்லம்
  14. பெருங்காயம்

கறிவேப்பக் செய்முறை

 baby

  • முதலாவதாக அரை கிலோ பேபி உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு 5-6 நிமிடங்களுக்கு வேக வைத்து தோலை உறித்து விடவும்
  • அடுத்ததாக 50 கிராம் கறிவேப்பிலையை எண்ணெய்யில் அப்பளம் போல பொறித்து எடுக்கவும்
  • அதன் பிறகு கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல் அரைத்து விடவும்
  • தற்போது ஒரு கடாயில் 50மிலி கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு போடவும்
  • கடுகு பொறிந்தவுடன் கடாயில் நான்கு பச்சை மிளகாய்களை கீறி போடவும்
  • பின்னர் மூன்று மீடியம் சைஸ் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  • வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் இஞ்சி-பூண்டு விழுது இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்
  • தற்போது இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை சிறிதாக வெட்டிக் கடாயில் போட்டு நன்றாக வதக்கவும்
  • அடுத்ததாக அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 20 விநாடிகளுக்கு கிண்டிய பிறகு அரை லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்
  • தக்காளி மற்றும் மசாலா தூள்களின் பச்சை வாடை போன பிறகு புளி தண்ணீர் சேர்க்க வேண்டும்
  • இதற்கு 50 கிராம் புளியை 100 மிலி தண்ணீரில் ஊற்றி அதிலிருந்து 50மிலி புளி தண்ணீரை எடுத்துக் கடாயில் ஊற்றவும்
  • இதையடுத்து தேவையான அளவு உப்பு, ஒன்றரை ஸ்பூன் வெல்லம் சேர்த்திடுங்கள்
  • ஐந்து நிமிடம் கழித்து கடாயில் அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பேஸ்ட்டை போடவும்
  • மிக்ஸியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கறிவேப்பிலை பேஸ்ட்டை எடுக்க கால் டம்ளர் தண்ணீட் பயன்படுத்துங்கள்
  • தற்போது கடாயில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்டு கொஞ்சம் பெருங்காயம் சேர்க்கவும்

தீயை குறைத்து வைத்துக் கொஞ்சம் நேரம் வறுத்தால் சுவையான பேபி உருளைக்கிழங்கு கறிவேப்பக் ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP