பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்க கட்டாயம் செய்ய வேண்டியவை

குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அறிவுறுத்தலை வழங்குவார்கள். அனைத்தையும் கேட்க முடியாது அல்லவா? உங்களுக்காகவே சில சிம்பிள் டிப்ஸ்களைப் பகிர்கிறோம்.
image
image

ஒரு வீட்டில் குழந்தையின் வருகை என்பது அளப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களுக்கு மட்டுமல்ல உடன் சுற்றியுள்ள அனைத்து சொந்தங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் உன்னத தருணம். ஆனால் புதிய தாய்மார்களுக்கு மகிழ்ச்சியோடு குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரிய சவாலாக அமையும். அதிலும் முதல் குழந்தைக்கு தாய் என்றால் சொல்லவே தேவையில்லை. ஆள் ஆளுக்கொன்று சொல்லித் தீர்த்துவிடுவார்கள். கேட்டுக்கொள்ளுங்கள். ஆனாலும் குழந்தைகளைப் பாதுகாப்பாக இந்த வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுங்கள்.

தாய்ப்பால் கொடுத்தல்:

சுகப்பிரசவம் அல்லது சிசேரின் என எதுவாக இருந்தாலும் வலியைப் பொருட்படுத்தாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் முதலில் வரக்கூடிய சீம்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். எனவே தவறாமல் கொடுத்துவிட வேண்டும்.

உடல் எடை அதிகமாகிவிடும் என்ற நினைப்பை விட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடத் தொடங்கி, அதை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மூலம் கொடுக்கவும். முதல் 30 நாட்களுக்கு குழந்தைகள் தூங்கினாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் எழுப்பி விட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பால் சாப்பிட்டதும் தூங்குகிறார்கள் என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

மேலும் படிக்க:இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்

ஒருவேளை உங்களிடம் பால் இல்லை என்றாலும் குழந்தைகள் சோர்வாகி தூங்குவார்கள். எனவே இவற்றை அறிந்துக் கொள்ள பாலை கையால் அல்லது பால் பம்பின் மூலம் எடுத்து கொடுக்கவும். சங்கு அல்லது பால் பாட்டிலில் கொடுக்க முயற்சி செய்யவும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு போதுமான அளவு பால் கிடைத்துவிட்டால் மார்பகத்தில் கொடுக்க ஆரம்பிக்கவும். ஆரம்பத்தில் 5 லிருந்து 10 எம்எல் அளவிற்குத் தான் பால் தேவைப்படும். நாள் செல்ல செல்ல அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு மசாஜ்:

காலையில் எழுந்தவுடன் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள். புதிதாக பிறந்த குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது மசாஜ் ஆயில் கொண்டு கை, கால் மற்றும் உடல் முழுவதும் தேய்க்கும் போது உறுப்புகள் வலுப்பெறும். மேலும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

டயாப்பர் மாற்றுதல்:

குழந்தைகளுக்கு முடிந்தவரை டயாப்பர் அணியாமல் காட்டன் துணியை அணிவிப்பது நல்லது. சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டால் உடனே மாற்றிவிடும். ஒருவேளை வெளியில் செல்லும் போது டயாப்பர் அணிகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று மாற்றுவது நல்லது. இத்தகைய செயல் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

குழந்தைகளைக் குளிக்க வைத்தல்:

குழந்தைகளைக் குளிக்க வைப்பது அவசியம் தான். ஒருவேளை உங்களது குழந்தைகள் உடல் எடை குறைவாக பிறந்திருக்கிறது என்றால் சூடான நீரைக் கொண்டு சில நாட்களுக்குத் துடைத்தெடுத்தால் போதும். அது ஒன்று செய்யாது. அதற்கு மாற்றாக வீட்டில் உள்ள முதியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அலுப்படுத்தி குளிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளை சரியாக கையாளுதல்:

புதிய தாய்மார்கள் குழந்தைகளைத் தூக்குவதற்கு அச்சம் கொள்வார்கள். முதலில் அதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் உங்களின் பயம் மற்றவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். இஷ்டத்திற்கு குழந்தைகளைத் தூக்கி அவர்களுக்கு கழுத்து வலியை ஏற்படுத்திவிடுவார்கள். எனவே தலையில் அதாவது கழுத்திற்குப் பின்னால் ஒரு கையும், ஒரு கையை இடுப்பைச் சுற்றி நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக குழந்தைகள் ஏன் அழுகிறார்கள்? என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அன்பும், பாசத்தையும் அளவில்லாது கொடுப்பதன் மூலம் குழந்தை மற்றும் அம்மாக்களின் பிணைப்பு அதிகரிக்கும்.

Image credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP