herzindagi
image

மகாசிவராத்திரிக்கு 3 சிறப்பான பிரதாசங்களின் செய்முறை; சர்க்கரை வள்ளிக்கிழங்கு முக்கியம்

மகாசிவராத்திரிக்கு மூன்று சிறப்பு பிரசாங்களான பருப்பு தூத்தம், இலை அடை, நவதானிய அவியல் செய்முறையை பார்க்கலாம். இதில் இலை அடை சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி செய்வது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு நெய்வேத்தியம் சிவபெருமானுக்கு விசேஷமானது.
Editorial
Updated:- 2025-02-25, 14:53 IST

மகாசிவராத்திரி நாளில் 4 கால பூஜை நேரத்திலும் சிவபெருமானுக்கு நெய் வேத்தியம் படைக்க வேண்டும். மகாசிவராத்திரி சிறப்பு பதிவாக சிவபெருமானுக்கு படைக்க மூன்றும முக்கிய பிரசாதங்களின் செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உணவு தயாரித்து நெய் வேத்தியம் செய்வது சிறப்பு. இதை மறக்காமல் செய்துவிடுங்கள். சிவராத்திரி சிறப்பு பிரசாதங்களாகப் பருப்பு தூத்தம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இலை அடை, நவதானிய அவியல் செய்முறையை பார்க்கலாம்.

மகாசிவராத்திரி பிரசாதங்கள்

பருப்பு தூத்தம் செய்ய தேவையானவை

  • பாசிப்பருப்பு
  • வெல்லம்
  • வெந்தயம்
  • நெய்
  • வெல்லம்
  • தேங்காய் துருவல்

பருப்பு தூத்தம் செய்முறை

  • கடாயில் ஒரு கப் பாசிப்பருப்பு, வெந்தயம் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். அதன் பிறகு தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
  • குக்கரில் ஒரு பாத்திரம் வைத்து அதில் பாசிப்பருப்பில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். அதே குக்கரில் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
  • குக்கர் 5 விசில் அடித்ததும் அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள். இதனிடையே அரை மூடி தேங்காயில் மூன்று கப் தேங்காய் பால் எடுக்கவும்.
  • கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்த பாசிப்பருப்பு, வடிகட்டிய வெல்ல பாகு ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
  • ஒரு கொதி வந்தவுடன் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், சுக்கு பொடி, பச்சை கற்பூரம் போட்டு அடுப்பை ஆஃப் செய்துவிடவும்.
  • ஒரு நிமிடம் கழித்து தேங்காய் பால் சேர்த்து கலந்துவிடுங்கள். பருப்பு தூத்தம் ரெடி.

மேலும் படிங்க  தைப்பூச நாளில் முருகனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம் படையுங்கள்; வீட்டிலேயே செய்யலாம்

இலை அடை செய்ய தேவையானவை

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • தேங்காய் துருவல்
  • நாட்டு சர்க்கரை
  • நெய்
  • கோதுமை மாவு

இலை அடை செய்முறை

  • கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு கப் தேங்காய் துருவல், அரை கப் நாட்டு சர்க்கரை சேர்த்து கொஞ்சம் வறுத்து ஸ்டப்பிங் தயாரிக்கவும்.
  • ஸ்டப்பிங்கில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்திடுங்கள்.
  • இப்போது வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை கைகளால் நன்கு பிசைந்து உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல் தயாரிக்கவும்.
  • இதை பூரி மாவு சைஸிற்கு எடுத்து உள்ளே தேங்காய் துருவல் ஸ்டப்பிங் செய்து கொழுக்கட்டை போல் மூடி இட்லி குக்கரில் வைத்து வேக விட்டு எடுங்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை அடை ரெடி.

நவதானிய அவியல்

  • தட்டைப் பயிறு, கிட்னி பீன்ஸ், மொச்சை, கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பாசிப் பயிறு, வெள்ளை சோயா, பட்டாணி, கொள்ளு தலா கால் கப் எடுத்து ஆகியவற்றை தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும்.
  • இவை அனைத்தையும் குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
  • இதனிடையே தலா ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, சீரகம், நான்கு காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து சூடு குறைந்தவுடன் அரைத்து எடுக்கவும்.
  • கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வேகவைத்த நவ தானியங்களை போட்டு கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து அரைத்த பவுடரை சேர்த்து நன்கு கலந்துவிடவும். நவதானிய அவியல் ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com