
தமிழகத்தில் முதல் முதலாக பூவிசார் குறியீடு பெற்ற கோயில் பிரசாதம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் ஆகும். 2019ல் பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவீசார் குறியீடு வழங்கப்பட்டது. நாளொன்றுக்கு 20 ஆயிரம் அரை கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களில் பஞ்சாமிர்தம் நிரப்பபடுகிறது. முருகனுக்கு உகந்த நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாமிர்த பாட்டில் விற்பனையாகிறது. சுமார் 470 கிராம் எடை கொண்ட பஞ்சாமிர்தத்தின் விலை 45 ரூபாய் ஆகும். முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பஞ்சாமிர்தம் 9ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற சங்க கால இலக்கியங்களில் இதற்கான ஆதாரம் உண்டு. அன்றைய காலத்தில் மலையில் கிடைத்த தேன் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரித்துள்ளனர். சிறுமலையில் கிடைத்த வாழைப்பழங்களை பஞ்சாமிர்த தயாரிப்புக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். மலையில் முருகனை தரிசித்த பிறகு பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்காமல் வீடு திரும்புவதில்லை. தைப்பூசத்தன்று முருகனை வழிபடும் போது பக்தர்கள் சர்க்கரை பொங்கல், பாயாசம் நெய் வேத்தியம் படைக்கின்றனர். எனினும் பஞ்சாமிர்தம் படைப்பது வெகு சிறப்பு. வீட்டிலேயே பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைக்கலாம். பஞ்சாமிர்தம் ஐந்து முக்கியமான உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிங்க வீட்டில் தயாரித்த குழம்பு மிளகாய் பொடி, கரம் மசாலா; கமகமக்கும் வாசனையில்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com