மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா செய்வது எப்படி?

மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

amazing madurai bun parota recipe in home

தமிழகத்தில் உணவைக் கொண்டாடும் ஊர் என்றால் முதலிடத்தை பிடிப்பது மதுரையாகத் தான் இருக்க முடியும். மதுரை உணவுகளின் ருசி, தனித்தன்மை வாய்ந்ததோடு மட்டுமின்றி தனி அடையாளமாகவே மாறி விட்டது. மதுரையில் அனைவரும் அதிகம் விரும்பி உண்ணும் முக்கியமான உணவுகளில் பரோட்டாவும் ஒன்று. வெறும் பரோட்டா என்று ஒரு வார்த்தையில் முடித்து விட முடியாது. மைதா பரோட்டா தொடங்கி கோதுமை பரோட்டா, செட் பரோட்டா, முட்டை லாப்பா, சில்லி பரோட்டா, பனீர் பரோட்டா, வெஜ் பரோட்டா, எண்ணெய் பரோட்டா, பன் பரோட்டா என மதுரை வீதிகளில் பரோட்டாவுக்கே ஏகப்பட்ட மெனு கார்டுகள் தொங்கும்.

அதிலும் குறிப்பாக பன் பரோட்டா மதுரையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. பன் பரோட்டாவுக்கு ஃபேமஸான ஸ்பாட் என்றால் அது மதுரை தான். உணவில் வித்தியாசத்தைக் காட்டும் மதுரைக்காரர்கள் பரோட்டா பிரியர்களுக்காகவே பன் பரோட்டாவை உருவாக்கினார்கள். இன்று பெரும்பாலானோர் விரும்பக் கூடிய உணவாக பன் பரோட்டா மாறிவிட்டது. சிறப்பான பரோட்டாக்கடைகள் மதுரையில் ஏராளம். ஆனால் பன் பரோட்டா அறிமுகத்துக்கு மூலகாரணமாக இருந்தது மதுரை ஆவின் சிக்னலில் அமைந்திருக்கும் ’மதுரை பன் பரோட்டா கடை’

மொறுமொறு ருசியில் வாயில் வைத்தாலே கரையும் தன்மை கொண்ட மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

madurai bun parota with gravy

  • மைதா - 500 கிராம் (4 கப்)
  • முட்டை - 1
  • பால் - 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்
  • உப்பு - 1 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

madurai bun parota

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால், தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு மற்றொரு அகலமான பாத்திரத்தில் மைதாவை சேர்த்து, அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி நன்கு பிசையவும்.
  • ஹோட்டல்களில் பரோட்டா மாஸ்டர் மாவு பிசைவதை அடிக்கடி பார்த்திருபோம். அது போலவே மாவை விடாமல் நன்கு பிசையவும்.
  • கூடுதலாக 3 டீஸ்பூன் மைதா மாவை மேலே சேர்த்து நன்கு அடித்துப் பிசையவும்.
  • பிசைந்த மாவின் மேல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்த மாவை துணியால் மூடி 2 மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
  • இப்போது, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • பின்பு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளைப் போட்டு அதன் மீது சிறிதளவு எண்ணெய் ஊற்றி மீண்டும் 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும்.

இந்த பதிவும் உதவலாம்: திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

பன் பரோட்டா

  • இப்போது மாவு எண்ணெயில் நன்கு ஊறி சரியான பதத்திற்கு வந்து இருக்கும்.
  • அடுத்து, கையில் எண்ணெய் தடவி கொண்டு உருண்டைகளை மெல்லியதாகத் திரட்டவும். பின்பு அதை மடித்து பன் பரோட்டா வடிவத்தில் சுற்றி கைகளால் தட்டி எடுக்கவும்.
  • பின்பு அடுப்பில் தோசை அல்லது சப்பாத்தி கல்லை வைத்து அதில் தட்டி வைத்துள்ள பரோட்டா மாவை போட்டு எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் பொரித்து எடுத்தால் அட்டகாசமான மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா தயார்.

இந்த செய்முறையை பின்பற்றி நீங்களும் வீட்டிலேயே மதுரை பன் பரோட்டா செய்து பாருங்கள். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP