ஹோட்டல் ஸ்டைல் மசாலா தோசை செய்வது எப்படி?

ஹோட்டல் சுவையில் மசாலா தோசை செய்வது எப்படி? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

masala dosa easy recipe tamil

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். சென்னையில் பலரும் மசாலா தோசையை ’மசால் தோசை’ என்று தான் அழைப்பார்கள். அது சென்னை ஸ்டைல். எப்படி வடைகறியை ’வடகறி’ என்று உச்சரிப்பார்களோ அதே போல் தான் மசால் தோசை.

எந்த வகையான தோசையாக இருந்தாலும் அதற்கு சாம்பர் மற்றும் தேங்காய் சட்னி தான் பெஸ்ட் காம்போ. சிலருக்கு தோசை மொறு மொறுப்பாக இருந்தால் பிடிக்கும். இன்னும் சிலருக்கு சாஃப்ட்டாக வாயில் வைத்தால் அப்படியே கரைவது போல இருக்க வேண்டும். எல்லா வயதினருக்கும் பிடித்தது நெய் தோசை. ஆனால் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு மூத்த வயதினர், தோசையில் அளவாக நெய் பயன்படுத்துவதே நல்லது. அதே போலத் தான் மசாலா தோசையும். சாப்பிட பயங்கர சுவையாக இருக்கும். ஆனால் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுவதால் வயதானவர்கள் சற்று குறைவாகச் சாப்பிடுவதே சிறந்தது. கடையில் வாங்குவதை விட மசாலா தோசையை வீட்டிலேயே ஆரோக்கியமாகச் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம். படித்துப் பயனடையுங்கள்.

தேவையான பொருட்கள்

masala dosa with chutney

  • தோசை மாவு – தேவைக்கேற்ப
  • உருளைக்கிழங்கு - 3
  • கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
  • சீரகம் – ½ டீஸ்பூன்
  • கடுகு – ¼ டீஸ்பூன்
  • பூண்டு – 5
  • கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி பெரிய துண்டு – 1
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • வெங்காயம் - 2
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • நெய் – 1 டீஸ்பூன்


மசாலா தயாரிக்கும் முறை

masala dosa with sambar chutney

  • முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்றாக இடித்து அதில் சேர்த்து வதக்கவும்.
  • இப்போது கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.
  • பின்பு அதில் சிறிதளவு பெருங்காயத்தூள், மஞ்சள் துள் மற்றும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
  • தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • உருளைக்கிழங்கு மசாலா நன்கு வெந்து வந்தவும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.

இந்த பதிவும் உதவலாம்: மணமணக்கும் ஹோட்டல் சாம்பார் ரெசிபி!!!

மசாலா தோசை செய்முறை

  • முதலில் அடுப்பில் தோசை கல்லை வைத்துச் சூடுப்படுத்தவும்.
  • பின்பு ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து, வட்ட வடிவில் தோசையை ஊற்றி அதன் மேல் நெய்யை சேர்க்கவும்.
  • இப்போது தயார் செய்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தோசை மேல் வைத்து, அதை தோசையைச் சுற்றி பரப்பி விடவும்.
  • தோசையை ஒருபக்கம் மட்டும் நன்கு முறுகலாக வேக வைத்து எடுத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் மசாலா தோசை தயார்.

நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே மசாலா தோசை செய்து பாருங்கள். பின்பு வீட்டில் இருப்பவர்கள் யாரும் ஹோட்டல் பக்கம் கூட போக மாட்டார்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP