herzindagi
image

கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்முறை

ஐதராபாத், ஆம்பூர், திண்டுக்கல் பிரியாணி சுவைத்தவர்கள் கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணியை தவற விடக்கூடாது. தலச்சேரி பிரியாணி தனித்துவ சுவை கொண்டது.
Editorial
Updated:- 2024-12-09, 22:50 IST

கேரள மாநிலம் மலபார் பகுதியில் உருவான தலச்சேரி பிரியாணி மிகவும் பிரபலமான பிரியாணி வகைகளில் ஒன்றாகும். இது தனித்துவமான சுவை கொண்ட பிரியாணி ஆகும். இதை சீரக சம்பா அரிசியில் செய்தால் ருசியாக இருக்கும். தலச்சேரி பிரியாணிக்கென தனியாக மசாலா அரைக்க வேண்டும். ஐதராபாத்தில் கிடைக்கும் பக்கி பிரியாணியும் தலச்சேரி பிரியாணி செய்முறையும் ஏறக்குறைய ஒன்றே. இதை பாஸ்மதி அரிசியில் தயாரிக்காதீர்கள். வாருங்கள் கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்முறையை பார்ப்போம். 

thalassery chicken biryani recipe

தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்ய தேவையானவை

  • சீரக சம்பா அரிசி
  • சிக்கன்
  • வெங்காயம் 
  • தக்காளி
  • ஏலக்காய்
  • பட்டை
  • கிராம்பு
  • அன்னாசி பூ
  • மிளகு
  • ஜாதி பத்திரி
  • சோம்பு
  • ஷாஹி ஜீரா
  • வர மிளகாய்
  • முந்திரி 
  • உலர் திராட்சை
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • நெய்
  • புதினா
  • கொத்தமல்லி 

தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்முறை

  • கேரளா ஸ்பெஷல் தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் மசாலா தயாரிக்கலாம்.
  • பேனில் எண்ணெய் ஊற்றாமல் நான்கு ஏலக்காய், இரண்டு துண்டு பட்டை, ஐந்து கிராம்பு, இரண்டு அன்னாசி பூ, அரை டீஸ்பூன் மிளகு, இரண்டு ஜாதி பத்திரி, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் ஷாஹி ஜீரா, இரண்டு வர மிளகாயை போட்டு 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  • இவற்றின் சூடு குறைந்ததும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைக்கவும். 
  • கடாயில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி போட்டு வறுக்கவும். இதே போல 15 முந்திரி, உலர் திராட்சை வறுத்திடுங்கள்.
  • கடாயில் கால் கப் நெய் ஊற்றி 4 வெங்காயத்தை நறுக்கி பொன்னிறத்திற்கு மாறும் வரை வதக்குங்கள். இதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு ஸ்பூன் பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்க போகிறோம்.
  • ஒரு கிலோ சிக்கனுடன் அனைத்தையும் கலந்து தண்ணீர் ஊற்றாமல் மிதமான தீயில் வேக விடுங்கள்.
  • இதோடு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு போடவும்.
  • இப்போது அரைத்த மசாலா முழுவதையும் சேர்த்து சிக்கனுடன் 3 நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
  • அடுத்ததாக இரண்டு தக்காளி நறுக்கி போட்டு வதக்கவும். 10 நிமிடங்களுக்கு சிக்கன் வெந்த பிறகு அரை கப் தயிர், புதினா, கொத்தமல்லி இலை, கொஞ்சம் வறுத்த வெங்காயம் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்துவிடுங்கள். பிரியாணிக்கான மசாலா ரெடி.
  • 2 கப் சீரக சம்பா அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி 50 விழுக்காடு அளவிற்கு வேகவிடவும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் நெய், பிரியாணிக்கு வழக்கமாக போடும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ போன்ற பொருட்களை போடவும்.
  • பெரிய பாத்திரத்தில் சிக்கன் மசாலா அதற்கு மேல் பாதியளவு அரிசி அடுத்த அடுக்கில் வறுத்த வெங்காயம், திராட்சை, முந்திரி அதற்கு மேல் அரிசி போட்டு தோசைக்கல்லில் வைத்து மூடி 15 நிமிடங்களுக்கு தம்மிட்டு எடுங்கள்.

மேலும் படிங்க ஸ்பெஷல் செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்முறை; ருசியோ வேற லெவல்

சுவையான கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணி ரெடி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com